கேட்டவை கிடைக்குமிடம்:

Sunday, March 14, 2010

இந்து முன்னணிகள் துடிப்பது ஏன்?

சாமியார்கள் மதத்தின் போர்-வையில் நடத்தும் அட்டூழியங்களும், ஆபாசங்களும் மக்கள் மத்தியில் சந்தி சிரிக்க ஆரம்பித்து விட்டன.

பிரம்மச்சாரியம் என்றெல்லாம் பேசிக் கொண்டு இரவில் கா-மவேட்டையில் இறங்கும் விளம்பரம் பெற்ற சாமியார்கள் உண்டு. யோகா ஆசிரமம் என்ற பெயரில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி கோடி கோடியாக பணம் பறிப்பது பெருந்தொழிலாகவும் நடைபெற்று வருகிறது. கோயில் கட்டுகிறோம் என்று சொல்லி மக்களிடம் பணம் பறித்து தலைமறைவாகும் பேர் வழிகள் பற்றியும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

பீர் சாமியார் என்றும், பீடி சாமியார் என்றும் சுருட்டு சாமியார் என்றும், கெட்ட வார்த்தை பேசும் சாமியார் என்றும், நிர்வாண சாமியார் என்றும் பல்வேறு பெயர்களில் உலா வந்து கொண்டே இருக்கின்றனர்.

இந்த நிலையில் மதத்தின்மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு விடுமே என்ற அச்சத்தில், இந்து முன்னணி வகையறாக்கள் தந்திரமான ஒரு வேலையில் ஈடுபட ஆரம்பித்-துள்ளனர்.

சாமியார்களின் இந்த ஆபாச நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாத நிலையில், வேறு வழியின்றி இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டிப்பதுபோல ஒரு தோற்றத்தை உருவாக்கிட முனைந்துள்ளனர்.

ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.

இது பொது மக்களை ஏமாற்றும் _ திசை திருப்பும் வேலையாகும். இதே இந்து முன்னணிக் கும்பல் காஞ்சி சங்கராச்சாரியார் கொலை தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்டாரே - _ பெண்கள் விஷயத்தில் சிக்கினாரே, ஊரே சிரித்ததே _ அப்பொழுது எங்கே போனார்கள்? காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தின் முன்ஆர்ப்பாட்டத்தை நடத்தவில்லையே -_ ஏன்?

கண்டிக்காததோடு மட்டுமல்ல; கொலைக் குற்றத்தின்கீழ் வேலூர் சிறையில் இருந்த அந்த ஆசாமிக்கு ஊர் தோறும் பவளவிழாக்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனவே _ ஊரெங்கும் கட் அவுட்டுகள் வைக்கப்படுகின்றனவே _ இவற்றைக் கண்டிக்க வேண்டாமா? நீதிமன்றத்தில் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்படும் வரையிலாவது இதுபோன்ற விழாக்களில் கலந்து கொள்ளக் கூடாது என்று குரல் கொடுக்க வேண்டியதுதானே! ஆங்காங்கே இத்தகைய விழாக்களை நடத்திட முன் வரிசையில் இருப்பது இந்தக் கும்பல்தானே! அதில்கூட பார்ப்பன சாமியாரா _ பார்ப்பனரல்லாத சாமியாரா என்று இனம் காண்கின்றனர் போலி-ருக்கிறது.

காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோயிலில் கர்ப்பக்-கிரகத்தில் அர்ச்சகர்ப் பார்ப்பான் தேவநாதன் பெண்களிடம் காமவெறி விளை-யாட்டு விளையாடினானே. மானம் உள்ள பெண்கள்தான் துடைப்-பத்தையும், செருப்பையும் தூக்கிக் கொண்டு கிளம்பினார்களேதவிர, எந்த இந்து முன்னணி, எந்த ஆர்.-எஸ்.எஸ். தேவ-நாதனை எதிர்த்துப் போராட்டம் நடத்த வீதிக்கு வந்தன?

இப்பொழுது இந்த சாமியார்களை எதிர்த்து இந்துமுன்னணி வகை-யறாக்கள் போராடுவது உண்மை உணர்வின் அடிப்படையில்தான் என்றால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்து மதத்தில் குடி கொண்-டிருக்கும் புராண ஆபாசங்கள், இதிகாச ஆபா-சங்கள் இவற்றைப் பற்றி தெளிவான முடிவுக்கு அவர்கள் வர வேண்டாமா? தாருகாவனத்து ரிஷிப் பத்தினிகளை சிவன் கற்பழித்தான். முனிவர்களின் சாபத்தால் சிவனின் சிசுனம் (ஆண் குறி) அறுந்து விழுந்தது என்றுள்-ளதே. இது ஆபாசமானது இல்லை என்று கூறப் போகிறார்களா?

பிர்மாவின் மகளும் சரஸ்வதி; மனைவியும் சரஸ்வதி என்று எழுதப்பட்டுள்ளதே இது வெட்கித் தலைகுனியத்தக்கது அல்ல என்று இயம்பப் போகிறார்களா? நாரதன் என்ற ஆண் கடவுளும் கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளும் புணர்ந்து பெற்ற பிள்ளைகள் 60 என்று அபிதான சிந்தாமணி என்னும் புராண அகராதி புகல்-கிறதே, -இதற்கு என்ன செய்வதாக உத்தேசம்? குரு பத்தினி தாரையைக் கற்பழித்தான் சந்திரன் என்று சொல்-லப்படுவதற்கு என்ன சமாதானம்? அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி என்று பாஞ்சாலியை வருணிக்கிறதே மகாபாரதம் _ பஞ்சமா பாதகம் அல்லவா? அது மட்டுமா? அய்ந்து கணவன் போதாது என்று ஆறாவதாக கர்ணன் மீதும் ஆசை கொண்டாள் அந்தப் பத்தினித் தேவதை என்று பாரதம் கூறுகிறதே _ பரிதாபத்துக்குரிய பாரத மாதா பக்திப் புத்திரர்கள் இதற்கு என்ன பதிலை வைத்துக் கொண்டிருக்-கிறார்கள்? சம்பூகன் என்ற சூத்திரன் தவம் செய்தான் என்பதற்காக மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படும் இராமன் வாளால் வெட்டிக் கொன்று கொலை பாதகம் செய்தானே இதற்குக் கூறப் போகும் நாணயமான பதில் என்ன?

இப்படிக் கூறிக் கொண்டே போகலாம். இந்து மதத்தின் ஆபாசக் கடல் இந்து மகா சமுத்திரத்தையும் தாண்டியது. இந்தக் கடவுள்கள் செய்த ஆபாசங்-களையெல்லாம் அப்படியே கரைத்துக் குடித்தவர்கள்தானே இந்த இந்துமத சாமியார்கள்?

பின் எப்படிதான் நடந்து கொள்-வார்கள்? எல்லாம் பகவான் காட்டிய வழிதானே! இந்து மதத்தின் மானம் கப்பலேறுகிறது _ மற்றவர்கள் முகத்தில் விழிக்க முடியவில்லை; சாதாரண மக்களும் காரித் துப்புகிறார்கள் என்றதும், தாங்களும் அவர்களை எதிர்ப்பதுபோல பாசாங்கு காட்டுகிறார்களே _ வீதிக்கு வந்து வேகமாக குரல் கொடுப்பதுபோல ஒரு நிர்ப்பந்தத்தால் காட்டிக் கொள்கிறார்களே _ அவர்களை நோக்கிப் பாயும் கேள்விக்கணைகள் இவைதாம். மூலக் கடவுள்களும் அவற்றின் முந்தானைவழி வந்த குட்டிக் கடவுள்களும் கற்பழித்து இருக்கும்போது, விபச்சாரம் செய்திருக்-கும்போது, கொலைகளைச் செய்திருக்கும்-போது அந்தக் கடவுள்களை நம்புகிற, வழிபடுகிற பக்தர்களான சாமியார்-களும் அதே வழியைப் பின்பற்று-கிறார்கள் என்று சொல்லலாம் அல்லவா?

நடிகையுடன் கட்டிப் புரண்ட சாமியார்களைக் கண்டிக்கும் அதே வாயால், தாருகாவனத்து ரிஷிப் பத்தினிகளுடனும் கிருஷ்ணபகவான் அறுபதாயிரம் கோபியருடனும் கட்டிப் புரண்டதையும் கண்டிக்க முன்வர வேண்டாமா?

இந்து முன்னணி வகையறாக்கள் ஒரு நெருக்கடி முட்டுச் சந்தில் சிக்கிக் கொண்டு விட்டார்கள். பகுத்தறிவு இருந்தால் சிந்திப்பார்கள். அவர்களி-டம்தான் அதை எதிர்பார்க்க முடியாதே!

மின்சாரம்

(விடுதலை ஞாயிறு மலர் - 06.03.10)

பண்ணாரி மாரியம்மனுக்கு ஒரு சவால்

மரக்கட்டைகள் எரிவதால் உண்டாகும் தழற் கட்டிகளுக்கு (நெருப்புத் துண்டங் களுக்கு) வெப்பத்தைக் கடத்தும் திறன் குறைவு. அதனால்தான் சமையல் செய்யும் போது அடுப்பிலிருந்து வெளியில் வந்து விழும் நெருப்புக் கட்டிகளை மகளிரும் கையால் எடுத்து அடுப்பினுள் மீண்டும் இட முடிகிறது. நெருப்பைக் காலாலும் மிதிக்க லாம். கையால் எடுத்தும் விளையாடலாம். இச் செய்கைகளுக்கு எதன் பாலும் மனதைப் பறி கொடுத்த நிலை இருந்தாக வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. ஆனாலும் நெருப்பின் மீது எவரும் நின்று கொண்டே இருக்க முடியாது. நெருப்பினைக் கையில் பிடித்து வைத்துக்கொண்டே இருக்க முடியாது. நெருப்பில் காலை மாற்றி மாற்றி நடக்கவேண்டும். சுடுமணலிலும் குறைந்த அளவே சூடு உறைக்கும். கைகளை மாற்றி மாற்றி அம்மானைக் காய்போல் நெருப்புக் கட்டிகளை நில்லாமல் சுழற்ற வேண்டும். காப்பித் தம்ளர் சுடுவதிலும் குறைந்த அளவே சூடு உறைக்கும். இதுவே நெருப் பில் நடத்தல், நெருப்பை எடுத்தல் ஆகிய செயல்களில் அடங்கியுள்ள உண்மை.

தீ மிதித்தலில் உள்ள அறிவியல் பூர்வமான இந்த உண்மையைக் கூறுவது விடுதலை பத்திரி-கை-யல்ல; -உண்மை இதழும் அல்ல. கலைக்-கதிர் என்னும் அறிவியல் இதழாகும் (அக்டோபர் 1971).

உண்மை இவ்வாறு இருக்க கோயிலில் பூக்குழி என்றும் தீக்குண்டம் என்றும் கூறி பக்தர்கள் தீயில் நடந்து செல்வது கடவுள் சக்தி என்று உண்மைக்கு மாறாகப் புரளி செய்கிறார்கள்.

விரதம் இருக்க வேண்டும், பக்தி செலுத்த வேண்டும். அப்பொழுதுதான் நெருப்பு சுடாது என்-பதெல்லாம் சுத்த புருடா என்று நிரூபிப்பதற்கே திராவிடர் கழகத் தோழர்கள் ஆங்காங்கே தீக்குண்டம் இறங்கிக் காட்டி வருகின்றனர்.

விறகுக் கட்டை நெருப்பில் இறங்கும் பக்தர்கள், இரும்புத் தகட்டைச் சூடாக்கி அதில் நடந்து காட்ட முடியுமா? முடியாது. விறகுக்கும், இரும்புக்கும் இடையில் உள்ள வெப்பம் கடத்தும் திறனில் உள்ள வித்தியாசமே இதற்குக் காரணம்.விறகுக் கட்டை நெருப்பில் கூட ஓடலாமே தவிர யாராலும் அந்தத் தீக்குண்டத்தில் நின்று கொண்டிருக்க முடியாது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் என்னும் ஊரில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் உள்ள ஒரு கோயில் பண்ணாரி மாரியம்மன் கோயில். ஆண்டு-தோறும் மார்ச் மாதத்தில் இந்தக் கோயிலில் தீ மிதித் திருவிழா என்பது பிரசித்தி பெற்றது. பண்-ணாரி மாரியம்மன் என்றால் சாதாரணமானதல்ல. மிகப் பெரிய சக்தி வாய்ந்தது என்று பிரச்சாரம் செய்து வைத்துள்ளனர். தீமிதி விழாவின்போது சுற்று-வட்டாரத்திலிருந்து ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கூடுவார்கள்.

தி.மு.க. அமைச்சர் ஒருவர் பண்ணாரி மாரியம்மன் கோயில் தீமிதியில் பங்கெடுத்துக் கொண்டார் என்பதற்காகக் கண்டித்து, காட்டுமிராண்டித்தனம் என்று முதலமைச்சர் கலைஞர் விமர்சனம் செய்ததுண்டு.

முதலமைச்சராக இருக்கக்கூடியவர் இப்படி சொல்லலாமா? என்று சில சட்டமன்ற உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்பினார்கள். முதலமைச்சர் கலைஞர் என்ன செய்தார் தெரியுமா? அன்றைய தினம் விடுதலையில் வெளிவந்த ஆதாரப்பூர்வமான படம் ஒன்றை எடுத்துக்காட்டி_ இது காட்டுமிராண்டித்தனம் அல்லாமல் வேறு என்ன? என்ற பகுத்தறிவு வினாவையும் எழுப்பினார். கேள்வி கேட்டவர்கள் கப்சிப் ஆனார்கள்.

அந்தப்படம் என்ன தெரியுமா? திருப்பூரை அடுத்த காரமடை என்னும் ஊரில் உள்ள கோயில் பூசாரி வாழைப்பழத்தை வாயில் போட்டு மென்று, - குழந்தை வரம் கேட்கும் பெண்களின் வாயோடு வாய் வைத்து துப்புகின்ற காட்சி அது! (கேட்கவே வாந்தி வருகிறது_- இப்பொழுதும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது - இவ்வாரம் ஓர் இதழில் இதனைக் காணலாம்).

விடுதலையில் வெளிவந்த அந்தப் படத்-தைத்-தான் சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடுத்துக் காட்டினார்.

அன்றைக்குப் பிரச்சினையான அதே பண்-ணாரி மாரியம்மன் கோயில் தீமிதியைக் கருத்தில் கொண்டு_- பக்திக்கும், சக்திக்கும், தீமிதிக்கும் சம்பந்தம் இல்லை என்பதை நிரூபித்துக் காட்ட இதோ, திராவிடர் கழகத் தோழர்கள் கருஞ்-சிறுத்தைகள் கிளம்பி விட்டனர்.

வரும் 6 ஆம் தேதி சனி மாலை 3 மணிக்கு பண்ணாரிக்கு அருகில் உள்ள சத்தியமங்கலத்தில் கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று சொல்லி தீக்குண்டம் இறங்கிக் காட்டுகிறார்கள். ஊரே பரபரப்பாகியுள்ளது. இளைஞர்கள் அந்த நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

வழக்கம்போல் இந்து முன்னணியினர் எதிர்ப்புச் சுவரொட்டியை ஒட்டியுள்ளனர். எதிரி செலவில் நமது நிகழ்ச்சிக்கு நல்ல அளவுக்கு விளம்பரம் ஆகியிருக்கிறது.

யாரையோ சீண்டுவதற்கல்ல இந்தத் தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி.

மக்களிடம் மண்டிக் கிடக்கும் மூடநம்பிக்கை இருளை விரட்டுவதற்கே_- பகுத்தறிவு ஒளியைப் பரப்புவதற்கே!

மக்களிடம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டமே கூறியுள்ளது 51_ஏ. இந்தக் கடமை-யினை ஆற்ற இளைஞர் பட்டாளமே எழு! எழு!!

கிளம்பியதுகாண் கருஞ்சட்டைப் பட்டாளம் என்று முரசொலித்துப் புறப்படு! புறப்படு!!

மதத்தின் பெயரால் சாமியார்கள் நடத்தும் அட்டகாசம் பெருகி வருகிறது. இந்த நேரத்தில் பகுத்தறிவு ரீதியான செயல்முறைத் திட்டங்கள் (Demonstrations) தேவை! தேவை!!

புதுத்திருப்பம்_ -புதுத் திருப்பம். புயல் போல் கிளம்புவீர் கழகப் புலிப் போத்துகளே!

- மின்சாரம் -

( "விடுதலை" - 04.03.2010 )

ஆரியத்துக்குச் சேவகமா?

தமிழ் என்று சொல்லுவதற்கோ, தமிழ்நாடு என்று குறிப்பிடுவதற்கோ, தமிழன் என்று அடையாளப்படுத்துவதற்கோ தந்தை பெரியார் எந்த வகையிலும் பின் வாங்கியவர் அல்லர்.

இன்னும் சொல்லப் போனால் இவற்றை மும்முரப் படுத்த வேண்டும் என்பதுதான் அவரின் முக்கிய ஆசையாகவும் இருந்து வந்தது.

இந்தப் பாழாய்ப் போன பாழ்படுத்தும் பார்ப்பன ஆதிக்கத்தை வீழ்த்த விடாமல், ஒரு தூசு அளவு சமாச்சாரம்கூடத் துணை போய் விடக் கூடாது என்பதிலே தந்தை பெரியார் அவர் கள் மிகவும் சுறுசுறுப்பாகக் காணப்பட்டார்கள்.

சூத்திரர் என்பவர்களுக்குத் திராவிடர் என்பது தவிர்த்து வேறு பொருத்தமான பெயர் வேறு யாராவது கூறுவார் களானால், அதை நன்றியறிதலுடன் ஏற்றுக் கொண்டு எனது அறியாமைக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் தயாராயிருக்-கிறேன்.

நீங்கள் கொடுக்கும் பெயரில், நான் மேலே கூறிய அத்தனை பேரும் (பல்வேறு ஜாதியினர் அத்தனை பேரும்) ஒன்று சேர வசதியிருக்க வேண்டும். அதில் சூத்திரனல் லாத ஒரு தூசிகூடப் புகுந்து கொள்ள வசதியிருக்கக் கூடாது. அயலார் புகுந்து கொள்ளாமல் தடுக்க ஏதாவது தடை யிருக்க வேண்டும். திராவிடர் என்று கூறினால் திராவிடர் அல்லாத பார்ப்பான் அதில் வந்து புகுந்து கொள்ள முடியாது. நான் ஒழிக்கப் பாடுபடும் பிறவி காரண-மான இழி தன்மையும் அவர்களுக்கு இல்லை. ஆகவே அவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கும் காரணம் இல்லை

-_ தந்தை பெரியார்

(நூல்: மொழி ஆராய்ச்சி)

பார்ப்பனர்கள் உள்ளே நுழைந்து விடக் கூடாது என்று திருப்பித் திருப்பி அடித்துச் சொல்லுவதற்கு ஆயிரம் ஆயிரம் வரலாற்றுக் காரணங்களும், இலட்சோப லட்ச நடைமுறைக் காரணங்களும் உண்டு _ ஆம், முக்காலும் உண்டு.

இன்று வரைகூட இந்துத்துவா என்ற மூடு திரையின் மூலமாக இந்தியாவைத் தம் வாயில் போட்டு விழுங்கிக் கொள்ள ஆரியம் ஆயிரங் கால் உருவத்துடன் ஆகாயம் வரைக்கும் வாயைப் பிளந்து கொண்டு நிற்பதை எண்ணிப் பார்த்தால், தந்தை பெரியார் திராவிடர் திராவிடர் என்று திருப்பித் திருப்பிக் கூறும் தீர்க்கமான கருத்தின் தீரம் என்ன என்று விளங்கியே தீரும்.

நம் நாட்டுக்கு, சமுதாயத்துக்கு இனத்திற்கு, திராவிடம் _ இந்த பெயர், அது தமிழல்ல என்பதனாலும், நமக்கு அது ஒரு பொதுக் குறிப்புச் சொல்லுமாக இருக்கிறதே என்று வலியுறுத்தி வந்தேன். அதை ஆந்திர, கர்நாடக, கேரள நாட்டு மக்கள் அல்லாமல், தமிழ் மக்களில் சிலரும் எதிர்த்தார்கள். பின்னவர்கள் என்ன எண்ணம் கொண்டு எதிர்த்தாலும், அவர்களுக்கு மற்ற மூன்று நாட்டார் ஆதரவு இருந்ததால் அதை வலியுறுத்துவதில் எனக்குச் சிறிது சங்கடமிருந்தது. அவர்கள் மூவரும் ஒழிந்த பிறகு (மொழிவாரி மாநிலம் பிரிந்த பிறகு) அவர்களையும் சேர்த்துக் குறிப்பிடத்தக்க ஒரு சொல் நமக்குத் தேவை-யில்லை என்றாலும் திராவிடன் என்ற சொல்லை விட்டு விட்டு, தமிழன் என்று சொல்லியாவது தமிழ் இனத்தைப் பிரிக்கலாம் என்றால், அது வெற்றிகரமாக முடிவதற்கு இல்லாமல் பார்ப்பான் (ஆரியன்) வந்து, நானும் தமிழன் தான் என்று கூறிக் கொண்டு உள்ளே புகுந்து விடுகிறான் என்று மிகுந்த எச்சரிக்கையோடு, ஆரியர் எதிர்ப்போடு கருத்துகளை மிகவும் நுட்பமாக முன் வைத்துள்ளார் வைக்கம் வீரர் பெரியார்.

(விடுதலை 12.1`0.1955)

திராவிடன் என்று சொன்னதால் தமிழனுக்கு இனவுணர்ச்சிவரவில்லை என்று வறட்டுத்தனம் பேசும் சிறுபிள்ளைகள் தந்தை பெரியார் அவர்-களால் தமிழனுக்கு ஊட்டப்பட்ட இனவுணர்ச்சி-போல வேறு யாரால் ஊட்ட முடிந்தது என்று விரல் நீட்டிச் சொல்ல முடியுமா?

தெட்சிணா பிரதேசம் என்ற திட்டம் வந்த-போதுகூட அது கூடாது என்று கூர்மையாக எதிர்ப்-புத் தெரிவித்தது யார்?

அதற்காகக் கூட்டப்பட்ட தலைவர்களின் கூட்டத்துக்கு, எதிர்த்துத் தந்தி கொடுத்த தலைவர் யார்?

வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று உளறும் ஊத்தை வாய்கள் நிதானித்துப் பேச வேண்டும்.சோ கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு ஆலோலம் பாட்டுப் பாட வேண்டாம்.

தந்தை பெரியார் அவர்களைத் தமிழர்களுக்கு எதிரிகள் என்று காட்டிட முயலும் ஒவ்வொரு செயலும் (அது எந்தக் கொம்பனாலும் முடியாது என்பது உறுதி) பார்ப்பனர்களின் வேருக்கு வார்க்கப்படும் சாக்கடைதான்!

இந்தியா முழுவதும் பார்ப்பனர் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பி அது சமூகநீதிக் கொடியாகப் பட்டொளி வீசிப் பறப்பதில் ஆத்திரம் கொள்ளும் ஆரிய சக்திகளுக்கு கால் அமுக்கும் வேலையில் தெரிந்தோ, தெரியாமலோ ஈடுபட வேண்டாம். தமிழக இளைஞர்களைக் குழப்ப முயல வேண்டாம், -எச்சரிக்கை!

-மின்சாரம்


மனுவாதி பக்கம் திரும்புக!

கேள்வி: பெண்களைப் பற்றி உங்களின் உண்மையான அபிப்பிராயம் தான் என்ன?

பதில்: உயர்ந்தவர்கள். அப்படி இருக்க விருப்பம் இல்லாதவர்கள். (18-.3.-2009)

கேள்வி: பெண்களுக்கு சமஉரிமை என்றால் உங்களுக்கு ஏன் கசக்கிறது?

பதில்: யார் இப்படியெல்லாம் என்னைப் பற்றி புரளி கிளப்பி விடுகிறார்களோ, தெரியவில்லையே! பெண்களுக்குச் சம உரிமை தேவை-தான். மாமியார், மருமகள் ஆகி-யோருக்குச் சம உரிமை வந்தால், அது வரவேற்கத் தக்கதுதான். (22-.-4.-2009)

கேள்வி: பெண்களிடம் எதைக் கற்றுக் கொள்ள வேண்டும்?

பதில்: என்ன தவறு செய்தாலும், அந்தத் தவறை தான் செய்யாதது போலவும், மற்றவர்கள்தான் அதற்குக் காரணம் என்பது போலவும் நடந்து கொள்கிற திறமை, அதைக் கற்றுக் கொண்டால் ஆண்களும் கூட நிம்மதியாக இருக்கலாமே? (20-.5.-2009)

கேள்வி: மத்திய அமைச்சரவையில் பெண் அமைச்சராக தமிழகத்திலிருந்து ஒருவர் கூட நியமிக்கப்படவில்லையே?

பதில்: தப்பித் தவறி ஏதாவது நல்லது நடக்கிற மாதிரி தெரிந்தால் போதும் _ உங்களைப் போல் பலருக்கு ஆட்சேபம் வந்துவிடுகிறது. யார் கண்டது? உங்கள் குறை தீராது என்று சொல்லிவிட முடியுமா என்ன? குடும்பத்தில் சமநீதி காண்பதற்கு வழி பிறந்தால், உங்கள் குறை நீங்கிவிடலாமே! (17-.6-.2009)

கேள்வி: மக்களவையில் மகளிருக்காக இட ஒதுக்கீடு மசோதா நூறு நாள்-களுக்குள் நிறைவேற்றப்படும் என்று குடியரசுத் தலைவர் தனது உரையில் கூறியுள்-ளாரே?

பதில்: சில தண்டனைகள் சொன்ன-படி நடப்பதில்லை. அஃப்ஸல் தூக்குத் தண்-டனை _ அப்படியே பெண்-டிங் ஆக இருக்கிறதே? அந்த மாதிரி இதுவும் தொங்கலில் விடப்பட்டால்தான் உண்டு. (24-.6.-2009)

கேள்வி: மக்களவை சபா-நாயகர் பெண் என்றால் இனி அமளியின்றி சபை நடைபெறுமா?

பதில்: ஒரு வீட்டில் பெண்கள் அதிகாரம் ஓங்கி இருந்தால், அந்த வீட்டில் அமளி, துமளி இல்லாமல் போய்விடுமா? அந்த மாதிரிதான் இதுவும். (1-.7.-2009)

கேள்வி: இந்தியாவில் உள்ள 617 ஹைகோர்ட் நீதிபதிகளில் 45 பேர்-தான் பெண் நீதிபதிகளாக உள்ளனர். மேலும் 6 ஹைகோர்ட் நீதிபதிகளில் ஒரு பெண் நீதிபதி கூட இல்லை. அதே போல் சுப்ரீம் கோர்ட்டிலும் ஒரு பெண் நீதிபதி கூட இல்லை. இது குறித்து தங்கள் கருத்து என்ன? (டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3.-8.-2009)

பதில்: நாடு சுதந்திரம் அடைந்த-போதும், அதைத் தொடர்ந்து சில வருடங்களிலும் பெண் நீதிபதிகளே இருந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். இப்பொழுது 45, 61 என்றெல்லாம் கணக்கு வருகிறது. சரி, சுதந்திரம் அடைந்தபோதும், அதைத் தொடர்ந்து சில ஆண்டுகளிலும், நீதித் துறையிடம் மக்களுக்கு இருந்த நம்பிக்கை இப்பொழுது இருக்கிறதா? நீதித் துறையில் பெண்களின் எண்ணிக்கை வளர்ந்து என்ன முன்னேற்றம் காணப் பட்டது? அந்த எண்ணிக்கையை அதிகமாக்குவதால், மேலும் என்ன முன்னேற்றம் வந்து விடும்? (2-.9-.2009)

கேள்வி: பெண்கள் சிறப்பு ரயில் திட்டம் பெண்கள் இட ஒதுக்கீட்டுக்-கான அச்சாரம் - என்று ப.சிதம்பரம் கூறுகிறாரே?

பதில்: அப்படியானால் சிறப்பு ரயில் ஓட்டாமலேயே, இத்தனை காலமாக பெண்கள் பலர் எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகளைப் பெற்றிருக்-கிறார்களே, அதெல்லாம் என்ன? கள்ளப் பயணம் மாதிரி, அதுவும் கள்ளப் பதவிகளா? (2-.9.-2009)

கேள்வி: பெண்களால் ரகசியத்தைக் காப்பாற்றவே முடியாது என்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளதே?

பதில்: பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே, மஹாபாரதத்தில், இது மிகத் தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது. அது ஆண் ஆதிக்கத் தீர்ப்பு; இன்று சொல்லப்பட்டிருப்பது, ஆராய்ச்சியின் முடிவு. அதை ஏற்காத-வன் மூடநம்பிக்கையில் உழல்பவன். (14.-10.-2009)

கேள்வி: பெண்கள் நாட்டின் கண்கள் என்பதை ஏற்றுக் கொள்-கிறீர்களா?

பதில்: இருக்கலாம். அந்தக் கண்-களின் பார்வையைச் சரி செய்கிற மூக்-குக் கண்ணாடிகள்தான் ஆண்-கள் என்-பதும் சரியாக இருக்கலாமே! (4-.11.-2009)

கேள்வி: கருநாடகாவில், ஷோபா-வின் அமைச்சர் பதவி தியாகத்தாலும், பா.ஜ.க. மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் செய்து வைத்த சமரசத்-தாலும் கருநாடக பா.ஜ.க. அமைச்-சரவையின் சிக்கல் தீர்ந்துள்ளதே? பெண்களின் பெருமை இப்போதாவது தங்களுக்குப் புரிந்திருக்குமே?

பதில்: புரிகிறதே! ஒரு பெண்மணி தன் பதவியைவிட்டு விலகுவதாலும், மற்றொரு பெண்மணி தனக்கு எந்தப் பதவியையும் நாடாமல் சமரசம் தேடிய-தாலும் பிரச்சினை தீர்ந்திருக்-கிறது. அதாவது பெண்களில் பத-வியை நாடா-மல் இருக்கிற வரை பிரச்சினைகள் தீர வழியுண்டு. இதைத்-தானே நீங்கள் சுட்-டிக் காட்டுகிறீர்கள். புரிகிறது. (2-1.2.-2009)

மேற்கண்ட கேள்வி பதில்கள் எல்லாம் இடம் பெற்ற பத்திரிகை எதுவாக இருக்க முடியும்?

21 ஆம் நூற்றாண்டின் மனுவின் தத்துப் புத்திரனாக இருக்கக்கூடிய திருவாளர் சோ ராமசாமியின் துக்ளக்-கில் எழுதப்பட்டவைதான் இவை.

இவை ஒவ்வொன்றிற்கும் தனியே பதவுரை, பொழிப்புரை, கருத்துரை தேவைப்படாது.

பட்டப்பகலில் சூரியனுக்கு விலாசமா தேவை?

பார்ப்பனர்களா?

பழைய காலமெல்லாம் மாறி-விட்டது

இன்றைக்கு எவ்வளவோ மாற்றம்

எவன் அவுட்டுத்திரி வைத்திருக்-கிறான்?

எவன் பஞ்சகச்சம் வைத்துக் கட்டு-கிறான்?

காலமாற்றம் அவர்களையும் விட்டு வைக்கவில்லை என்று அவாளுக்காக வக்காலத்து வாங்கும் ஆசாமிகள் நம்மவாளிடத்திலே உண்டு.

மாற்றமா? அது வெளிப்புறத்தில்-தான்.

தோற்றத்திலும் மாற்றம் இருக்-கிறது. மறுக்கவில்லை.

ஆனால் உள்ளத்தில் மாற்றம் உண்டா? எண்ணத்தில் ஏற்பட்டு-விட்டதா மாற்றம்? சிந்தனையில் சிறிதாவது முன்னேற்றம் உண்டா என்றால் இல்லை - இல்லவே இல்லை என்பதற்கு ஆணி அடித்தாற் போன்ற எடுத்துக் காட்டுதான் மேலே எடுத்துக் காட்டப்பட்டவை.

எந்த ஓர் இடத்திலாவது பெண்கள் என்றால் அவர்களுக்கு மனிதக் கூறுதான் என்று ஏற்றுக் கொள்ள இடம் இருக்கிறதா?

பெண்கள் உயர்ந்தவர்கள்தானாம். ஆனால் இப்படி இருக்க விருப்பம் இல்லாதவர்களாம்.

உயர்ந்தவர்களாக இருக்க விருப்பம் இல்லாதவர்கள் எப்படி உயர்ந்தவர்-களாக இருக்க முடியும்?

இப்படி ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் அந்தர் பல்டி அடிக்கும் ஆசாமி-கள்தான் அவாள் அகராதியில் அறிவாளியோ அறிவாளி!

ஒரு முறை பின்பொறியால் சிரித்துத் தொலையுங்கள்.

இதில் ஒரு வெட்கக்கேடு என்ன தெரியுமா?

இவ்வளவு இழிவாகப் பெண்களை இந்தப் பார்ப்பான் விமர்சித்திருந்தாலும், கொச்சைப் படுத்திக் கூவினாலும், முற்போக்கு முத்திரை குத்தி அலையும் எந்தப் பெண்கள் அமைப்பும் அது பற்றியெல்லாம் மூச்சு விடுவதில்லை. ஒரு கண்டன அறிக்கைகூட கொடுப்ப-தில்லை.

திராவிடர் கழகம்தான் தீயாக எழவேண்டும். விடுதலைதான் வேங்-கைப் புலியாக பாயவேண்டும்.

எழுத்துக்கு எழுத்து செம்மையாகக் கொடுக்கும் சாட்டை பெரியார் திடலில்-தான் இருக்கிறது. கருஞ்சட்டைக்காரரின் கையில்தான் அது சுழன்று கொண்டே இருக்கிறது.

பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்-கீடு பற்றிய பிரச்சினையில் இருவேறு கருத்துகள் உண்டு. ஒன்று உள் ஒதுக்கீடு இல்லாத இட ஒதுக்கீடு; இன்னொன்று உள்ஒதுக்கீடு இருந்தே தீரவேண்டும் என்கிற வற்புறுத்தல்.

மூன்றாவது ஒரு கூட்டம் இருக்கிறது. அதுதான் சோ போன்ற மனுதர்ம மலத்தை மடியில் கட்டிக் கொண்டு அலையும் கூட்டம்.

தினமணி என்ற பெயர் இருக்கும்; இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற நாமம் இருக்கும்; கோயங்கா வீட்டுக் கணக்கப் பிள்ளையான குருமூர்த்தி வடிவத்திலும் இருக்கும்.

பெண்களுக்கு இடஒதுக்கீடு கூடவே கூடாதாம். அது வீண் வேலையாம். இந்தச் சட்டம் வருவதால் பெண்களுக்-குப் புதிதாக ஆகப் போவது ஒன்றும் கிடையாதாம்; - வெறும் கண்துடைப்பு-தானாம்.

பெண்கள் மீதான அக்கறை காரண-மாகச் சொல்லப்படுவதா இவை? அல்ல, அல்ல. பெண்கள் மீதான வக்கிரக் குணத்-துடன் வடிகட்டி எழுதப்படும் வருணாசிரமவாதிகளின் குமட்டல்கள் இவை.

டெக்கான் கிரானிக்கல் (9-.3-.2010) ஆங்கில நாளேட்டில் (பக்கம் 2 இல்) திருவாளர் சோ ராமசாமியின் பேட்டி வெளிவந்துள்ளது.

அப்பட்டமான மனுதர்மத்தின் அசல் அக்மார்க் முத்திரையுடன் கருத்துச் சொல்லியிருக்கிறார்.

சட்டமன்றங்களும், நாடாளுமன்ற-மும் பெண்களுக்கான சட்டங்களை இயற்றவில்லையா? பின் எதற்காக பெண்-களுக்கென்று தனி ஒதுக்கீடு? அதனால் என்ன பலன் ஏற்பட்டு விடப் போகிறது?

பெண்களுக்கான தொகுதிகள் ஒதுக்கப் பட்டால் அந்த இடத்தில் யார் நிறுத்தி வைக்கப்படுவார்கள்? ஏற்கெ-னவே சட்ட மற்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்-பவர்களின் மனைவிமார்களோ மகள்-களோதான் நிறுத்தி வைக்கப்படுவார்-கள்?

தேர்ந்தெடுக்கப்படும் இந்தப் பெண்-கள் ஆண்களின் பினாமியாகத் தானி-ருப்பார்கள் என்று மூக்கால் அழுகிறார்.

உள்ளாட்சித் தேர்தலில் பெண்-களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட பொழுதும் இதே கூட்டம் இந்த வகை-யில்தான் மண்ணை வாரி இறைத்தது.

உள்ளாட்சிகளில் பெண்கள் போய் உட்கார்ந்ததால் என்ன கெட்டுப் போய்-விட்டது? எதில் தோல்வி அடைந்து-விட்டார்கள்?

வாய்ப்புக் கொடுப்பதற்கு முன்பே வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்வது ஆற்றாமையின் வெளிப்பாடு. மனுதர்ம குயுக்தியின் கோணல் புத்தி!

543 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் குறைந்த பட்சம் 181 பெண்கள் வீற்றிருக்கப் போகிறார்களே - பொறுக்குமா இந்தப் பூதேவர்களுக்கு? வீங்கி வெடித்திட மாட்டார்களா?

தங்கள் உரிமைகளுக்காக இன்னொரு-வரிடம் கையேந்தி நின்ற காலத்திற்குக் கல்தா கொடுக்கப் பட்டுவிட்டதே!

ஆண்களுக்கு உள்ள ஒவ்வொரு உரிமையும் தங்களுக்கும் வேண்டும் என்று ஓங்கிக்குரல் கொடுப்பார்களே _ அது இன்னொரு வகையில் இந்த ஈரோட்டுக் கிழவனாரின் கொள்கைக்கு அல்லவா வெற்றியாக முடியும்?

தமிழ்நாட்டைப் பீடித்த பெரியார் சரக்கு டில்லிப் பட்டணம் வரை அம்-பலம் ஏறிவிட்டதே என்ற ஆத்திரத்தில் அம்மிக் குழவியை எடுத்து வயிற்றில் குத்திக் கொள்கிறது சோ கூட்டம்.

33 சதவிகிதத்துக்காகப் போராடும் பெண்களின் கவனம் இந்த மனுவாதி-களின் பக்கமும் திரும்பும் நாள் எந்-நாளோ!

- மின்சாரம்