தமிழ் என்று சொல்லுவதற்கோ, தமிழ்நாடு என்று குறிப்பிடுவதற்கோ, தமிழன் என்று அடையாளப்படுத்துவதற்கோ தந்தை பெரியார் எந்த வகையிலும் பின் வாங்கியவர் அல்லர். இன்னும் சொல்லப் போனால் இவற்றை மும்முரப் படுத்த வேண்டும் என்பதுதான் அவரின் முக்கிய ஆசையாகவும் இருந்து வந்தது. இந்தப் பாழாய்ப் போன பாழ்படுத்தும் பார்ப்பன ஆதிக்கத்தை வீழ்த்த விடாமல், ஒரு தூசு அளவு சமாச்சாரம்கூடத் துணை போய் விடக் கூடாது என்பதிலே தந்தை பெரியார் அவர் கள் மிகவும் சுறுசுறுப்பாகக் காணப்பட்டார்கள். சூத்திரர் என்பவர்களுக்குத் திராவிடர் என்பது தவிர்த்து வேறு பொருத்தமான பெயர் வேறு யாராவது கூறுவார் களானால், அதை நன்றியறிதலுடன் ஏற்றுக் கொண்டு எனது அறியாமைக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் தயாராயிருக்-கிறேன். நீங்கள் கொடுக்கும் பெயரில், நான் மேலே கூறிய அத்தனை பேரும் (பல்வேறு ஜாதியினர் அத்தனை பேரும்) ஒன்று சேர வசதியிருக்க வேண்டும். அதில் சூத்திரனல் லாத ஒரு தூசிகூடப் புகுந்து கொள்ள வசதியிருக்கக் கூடாது. அயலார் புகுந்து கொள்ளாமல் தடுக்க ஏதாவது தடை யிருக்க வேண்டும். திராவிடர் என்று கூறினால் திராவிடர் அல்லாத பார்ப்பான் அதில் வந்து புகுந்து கொள்ள முடியாது. நான் ஒழிக்கப் பாடுபடும் பிறவி காரண-மான இழி தன்மையும் அவர்களுக்கு இல்லை. ஆகவே அவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கும் காரணம் இல்லை -_ தந்தை பெரியார் (நூல்: மொழி ஆராய்ச்சி) பார்ப்பனர்கள் உள்ளே நுழைந்து விடக் கூடாது என்று திருப்பித் திருப்பி அடித்துச் சொல்லுவதற்கு ஆயிரம் ஆயிரம் வரலாற்றுக் காரணங்களும், இலட்சோப லட்ச நடைமுறைக் காரணங்களும் உண்டு _ ஆம், முக்காலும் உண்டு. இன்று வரைகூட இந்துத்துவா என்ற மூடு திரையின் மூலமாக இந்தியாவைத் தம் வாயில் போட்டு விழுங்கிக் கொள்ள ஆரியம் ஆயிரங் கால் உருவத்துடன் ஆகாயம் வரைக்கும் வாயைப் பிளந்து கொண்டு நிற்பதை எண்ணிப் பார்த்தால், தந்தை பெரியார் திராவிடர் திராவிடர் என்று திருப்பித் திருப்பிக் கூறும் தீர்க்கமான கருத்தின் தீரம் என்ன என்று விளங்கியே தீரும். நம் நாட்டுக்கு, சமுதாயத்துக்கு இனத்திற்கு, திராவிடம் _ இந்த பெயர், அது தமிழல்ல என்பதனாலும், நமக்கு அது ஒரு பொதுக் குறிப்புச் சொல்லுமாக இருக்கிறதே என்று வலியுறுத்தி வந்தேன். அதை ஆந்திர, கர்நாடக, கேரள நாட்டு மக்கள் அல்லாமல், தமிழ் மக்களில் சிலரும் எதிர்த்தார்கள். பின்னவர்கள் என்ன எண்ணம் கொண்டு எதிர்த்தாலும், அவர்களுக்கு மற்ற மூன்று நாட்டார் ஆதரவு இருந்ததால் அதை வலியுறுத்துவதில் எனக்குச் சிறிது சங்கடமிருந்தது. அவர்கள் மூவரும் ஒழிந்த பிறகு (மொழிவாரி மாநிலம் பிரிந்த பிறகு) அவர்களையும் சேர்த்துக் குறிப்பிடத்தக்க ஒரு சொல் நமக்குத் தேவை-யில்லை என்றாலும் திராவிடன் என்ற சொல்லை விட்டு விட்டு, தமிழன் என்று சொல்லியாவது தமிழ் இனத்தைப் பிரிக்கலாம் என்றால், அது வெற்றிகரமாக முடிவதற்கு இல்லாமல் பார்ப்பான் (ஆரியன்) வந்து, நானும் தமிழன் தான் என்று கூறிக் கொண்டு உள்ளே புகுந்து விடுகிறான் என்று மிகுந்த எச்சரிக்கையோடு, ஆரியர் எதிர்ப்போடு கருத்துகளை மிகவும் நுட்பமாக முன் வைத்துள்ளார் வைக்கம் வீரர் பெரியார். (விடுதலை 12.1`0.1955) திராவிடன் என்று சொன்னதால் தமிழனுக்கு இனவுணர்ச்சிவரவில்லை என்று வறட்டுத்தனம் பேசும் சிறுபிள்ளைகள் தந்தை பெரியார் அவர்-களால் தமிழனுக்கு ஊட்டப்பட்ட இனவுணர்ச்சி-போல வேறு யாரால் ஊட்ட முடிந்தது என்று விரல் நீட்டிச் சொல்ல முடியுமா? தெட்சிணா பிரதேசம் என்ற திட்டம் வந்த-போதுகூட அது கூடாது என்று கூர்மையாக எதிர்ப்-புத் தெரிவித்தது யார்? அதற்காகக் கூட்டப்பட்ட தலைவர்களின் கூட்டத்துக்கு, எதிர்த்துத் தந்தி கொடுத்த தலைவர் யார்? வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று உளறும் ஊத்தை வாய்கள் நிதானித்துப் பேச வேண்டும்.சோ கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு ஆலோலம் பாட்டுப் பாட வேண்டாம். தந்தை பெரியார் அவர்களைத் தமிழர்களுக்கு எதிரிகள் என்று காட்டிட முயலும் ஒவ்வொரு செயலும் (அது எந்தக் கொம்பனாலும் முடியாது என்பது உறுதி) பார்ப்பனர்களின் வேருக்கு வார்க்கப்படும் சாக்கடைதான்! இந்தியா முழுவதும் பார்ப்பனர் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பி அது சமூகநீதிக் கொடியாகப் பட்டொளி வீசிப் பறப்பதில் ஆத்திரம் கொள்ளும் ஆரிய சக்திகளுக்கு கால் அமுக்கும் வேலையில் தெரிந்தோ, தெரியாமலோ ஈடுபட வேண்டாம். தமிழக இளைஞர்களைக் குழப்ப முயல வேண்டாம், -எச்சரிக்கை! -மின்சாரம் |
கேட்டவை கிடைக்குமிடம்:
Sunday, March 14, 2010
ஆரியத்துக்குச் சேவகமா?
Labels:
சூத்திரர்,
தந்தை பெரியார்,
தமிழ்,
திராவிடர்,
பார்ப்பனர்கள்,
விடுதலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment