கேட்டவை கிடைக்குமிடம்:

Sunday, May 9, 2010

பலத்தைக்காட்ட ஒரு தருணம்!


பாரதீய ஜனதா கட்சி என்பது ஆர்.எஸ்.-எஸின். அரசியல் வடிவம். ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் அமைப்பு-களின் சமுதாயக் கொள்கைகள் என்னவோ, அவை அத்தனையும் பா.ஜ.க.வுக்கும் உண்டு.

சுருக்கமாகச் சொல்ல வேண்டு-மானால் பா.ஜ.க.வின் அவிட்டுத்திரி சிண்டு இந்த சங்பரிவார் சாம்பார்-களிடம் தான்!

ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்ற ஒருவர்தான் பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக இருக்க முடியும். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடக் கூடிய பா.ஜ.க., வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் குழுவில் ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதி ஒருவர் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்கிற அளவுக்கு பா.ஜ.க.-மீது குதிரை சவாரி செய்யும் ஆதிபத்யம் ஆர்.எஸ்.எஸுக்கு உண்டு.

பா.ஜ.க.வில் இருந்தாலும் அந்தப் பார்ப்பன வெறித்தனத்தின் வெக்கையில் மாற்றமில்லை.

இதில் உள்ள வட்டியும் குட்டியும் போட்ட வெட்கக்கேடு என்னவென்-றால் இந்த அமைப்புகளில் உள்ள பார்ப்பனர் அல்லாத ஆசாமிகள் நிஜப் புலிகளைவிட _ அதிகமாகத் துள்ளித் தொலைப்பார்கள்; - தன்மீது சந்தேகக் கரும்புள்ளியைக் குத்திவிடக் கூடா-தல்லவா!

இந்தப் பட்டியலைச் சேர்ந்தவர்கள்-தான் அத்வானி, நரேந்திரமோடி, தொகாடியா வகையறாக்கள்.

குஜராத் நரேந்திர மோடியிருக்-கிறாரே _ தன்னை சூரப்புலியாகக் காட்டிக் கொள்ளும் அவசியத்தில் இருக்கிறார். இல்லாவிட்டால் எந்த நேரத்திலும் ஆரிய சந்திரகாந்தாக்களின் சவுக்கடி மரண அடியாக விழுமே!

கோல்வால்கர் கூறும் வருணாசிரம தர்மத்தை வடிகட்டாமலேயே ஏற்றுக் கொள்ளும் வடிகட்டிய விபீஷணர் இவர்.

2007-ஆம் ஆண்டில் புத்தகம் ஒன்றை எழுதி மாட்டிக் கொண்டார் கர்மயோக் என்னும் நூலை எழுதி-னார். குஜராத் மாநில அரசின் செய்தித்-துறை அதனை வெளியிட்டு இருந்தது.

சில வேளைகளில் மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டிருப்போர்க்கு ஞானம் ஊட்டப் பெறலாம். அவர்களின் வேலை சமூகத்தில் - _ மகிழ்ச்சிக்காகவும், கடவுள்-களின் சந்தோஷத்திற்காகவும் செய்யப்-படுவதாகும் எனவும் கருதலாம் என்று அந்த நூலிலே குறிப்பிடப்பட்டு இருந்தது (The Times of India Dated: 5.5.2010).

ஆக மலம் அள்ளுபவர்கள் மலம் அள்ளுபவர்களாகவே இருக்க வேண்-டும் _ அது கடவுளின் சந்தோஷத்துக்கு உரியது என்ற இந்து மதத்தின் காலா-வதியான கர்மா தத்துவத்தை 2007_லும் காப்பாற்றும் ஒரு வேலையைச் செய்தார் - _ கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்-பியது.

அதனைக் கண்டித்து மோடியின் கர்ம-யோக் நூலைக் கொளுத்தும் போராட்டத்தைத் திராவிடர் கழகம் நடத்தியது (11.12.2007).

திராவிடர் கழகத் தலைவர் மான-மிகு கி. வீரமணி அவர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்-சித் தமிழர் தொல். திருமாவளவனும் கலந்து கொண்டு கைதானார்கள்.

மலம் அள்ளும் ஜாதிக்கு மலம் அள்ளும் ஜாதிக்கு குப்பை அள்ளும் ஜாதிக்கு

குப்பை அள்ளும் ஜாதிக்கு

மோட்சம் கிடைக்குமாம்

மோட்சம் கிடைக்குமாம்

எழுதுகிறார் எழுதுகிறார்

நரேந்திர மோடி எழுதுகிறார்

புதுப்பிக்கிறார் புதுப்பிக்கிறார்

குலதர்மத்தைப் புதுப்பிக்கிறார்

எரிப்போம், எரிப்போம்

மோடியின் நூலை எரிப்போம்!

கொளுத்துவோம்

கொளுத்துவோம்

குலதர்மத்தைக் கொளுத்துவோம்!

சாக்கடை அள்ள சாக்கடை அள்ள

போகட்டும் போகட்டும்

சங்கராச்சாரியார் போகட்டும்!

போகட்டும் போகட்டும்!

சொர்க்கலோகம் போகட்டும்!

மலம் அள்ள மலம் அள்ள

போகட்டும் போகட்டும்

மனுவாதிக்கூட்டம் போகட்டும்

போகட்டும் போகட்டும்

மோட்ச லோகம் போகட்டும் வருகிறோம் வருகிறோம்

நெருப்பு வைக்க வருகிறோம்

என்று கருஞ்சட்டை தோழர்களும், விடுதலைச் சிறுத்தைகள் தோழர்களும் விண்ணதிர வேங்கையெனச் சீறி எழுந்து முழக்கமிட்டனர்.

அப்பொழுதாவது புத்தி கொள் முதல் பெற வேண்டாமா? இப்பொழுது மீண்டும் அதே பாணியில், அதே திமி-ரில் தம் அழுக்கடைந்த ஆரியத்துக்கு துணை போன சாக்கடைப் புத்தியைக் காட்டிக் கொண்டுள்ளார்.

மறுபடியும் ஒரு புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். சமாஜிக் சம்ரஸ்தா என்பது நூலின் பெயர் மே 1 (2010) அன்று அகமதாபாத்தில் அந்த நூல் வெளியிடப்பட்டது. அந்த விழாவில் நரேந்திரபாய் தாமோதரதாஸ் மோடி பேசியிருக்கிறார்.

மனநலம் குன்றிய குழந்தைகள் உள்ளவர்களின் வீடுகளுக்குச் செல்லும் போது நாம் எப்படி அந்தக் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வோமோ, அதேபோல தாழ்த்தப்பட்ட மக்களையும் நாம் நடத்த வேண்டும் என்று தனது உளறல் வாயை ஊர் சிரிக்கத் திறந்துள்ளார்.

தாழ்த்தப்பட்டவர்களை மனநலம் குன்றியவர்களுடன் ஒப்பிட்டுக் கூறியுள்-ளார்.

புரியும்படிச் சொன்னால் பைத்தியக்-காரர்கள் என்று பட்டம் சூட்டுகின்-றார்.

பார்ப்பனியத்தின் அடி வருடும் இந்தப் பைத்தியக்காரர்கள் பார்ப்-பனியத்தால் பன்னூறு வருட காலம் அழுத்தி மிதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து மனநலம் குன்றியவர்கள் என்று மமதையோடு கூறுகிறார் என்றால், இந்த மண்டைக் கனத்தை 21-ஆம் நூற்றாண்டிலும் அனுமதிக்கப் போகிறோமோ என்பது தான் நம் முன் வெடித்துச் சிதறும் கேள்வி என்னும் நெருப்புத் துண்டமாகும்.

மோடியின் மூர்க்கத்தனமான வார்த்தைகளை எதிர்த்து மாநிலங்-களவையில் அமளி ஏற்பட்டது.

காங்கிரஸ் உறுப்பினரான பிரவீன் ராஷ்ட்ரபால் கண்டனக் குரலை எழுப்-பினார். தலித்துகள் குறித்த தம் எண்-ணத்தை இதன்மூலம் மோடி வெளிப்-படுத்தியுள்ளார் என்று நெருப்புக் குரல் கொடுத்தார். இது டாக்டர் அம்பேத்-கரையே அவமதித்ததாகும் என்று வெகுண்டெழுந்தார். இவருக்கு ஆதரவாக ஜெயந்தி நடராசன், ஜே.டி. சீலம், ஈஸ்வர்சிங் எம்.ஏ. கான் உள்ளிட்டோர் ஆர்த்து எழுந்தனர். கடும் அமளியின் காரணமாக மாநிலங்-களவை ஒத்தி வைக்கப்பட நேர்ந்தது.

மக்களவையிலும் காங்கிரஸ் உறுப்-பினரான புனியா குரல் எழுப்பினார், நரேந்திரமோடி போன்றவர்களை தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்று குரல் கொடுத்தார்.

அவை ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் கூடியதும் மீண்டும் எதிர்ப்புக் கணை எரி நெருப்பாய்த் தகித்தது.

வருணாசிரமம் என்பதை அடிப்படைக் கொள்கையாக ஏற்றுக் கொண்டவர்கள் மோடிபோல் தான் நடந்து கொள்வார்கள்.

பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்-சருமான டாக்டர் முரளி மனோகர் ஜோஷி இதே பாணியில் பேசியவர்-தான். கடுமையான கண்டனக் கணை-களுக்கு இரையானவர்தான்.

1991-இல் மக்களவைத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும் பார-தீய ஜனதாவுக்கும் துவக்கத்தில் உடன்-பாடு ஏற்படவில்லை. உடனே பாரதீய ஜனதா, தனது கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தப் போவதாக அறிவித்திருந்தது. இதுபற்றி பாரதீய ஜனதா கட்சித் தலைவர் பார்ப்பன முரளி மனோகர் ஜோஷி டில்லியில் காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து ஒரு பேட்டி அளித்தார். ஜூலை 11 ந் தேதி (1991) இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்-டில் வெளிவந்த பேட்டி இதுதான்.

பாரதீய ஜனதாவை தங்கள் வசதிக்கேற்ப யாரும் பயன்படுத்திக் கொள்ள முடியாது. பா.ஜ.க.வை நீங்கள் ஒரு பறையனைப் போல் நடத்தக் கூடாது இதைச் செய்துவிட்டு, நாங்கள் காங்கிரசை ஆதரிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கக் கூடாது

இவ்வாறு பார்ப்பன இறுமாப்போடு தாழ்த்தப்பட்ட மக்களை அவமதித்-திருக்கிறார், பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்.

பாரதீய ஜனதா தலைவரின் இந்தப் பார்ப்பனத் திமிர் பேட்டியைக் கண்டித்து, சில சமூக நல அமைப்புகள் குடியரசுத் தலைவருக்கு தந்திகளையும் அனுப்பின.

சு.சாமி என்ற பார்ப்பனர்கூட, ஒருமுறை விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை International Pariah என்று அழைத்-ததையும் இந்த இடத்தில் நினைவு கூர்தல் அவசியம்.

பார்ப்பனர்களிடத்தில் அவர்களின் தொங்கு சதைகளி-டத்தில் பார்ப்பனர் அல்லா-தாரின் பலம் எத்தகையது என்-பதை யதார்த்தமாக உணர்த்தாத-வரை அவர்களின் ஆணவத் திமிர் அடங்கப் போவதில்லை.

பார்ப்பனர் அல்லாதார் புரிந்து கொள்வார்களாக!

Wednesday, April 28, 2010

பெரியாரைப் பற்றி பேராசிரியரிடம் கேளுங்கள்!


சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியத் துறையில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்-பட்டுள்ள தந்தை பெரியார் நினைவு அறக்கட்டளை சிறப்புச் சொற்பொழிவினை திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில், தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு நிதியமைச்சருமான இனமான பேராசிரியர் மாண்பு-மிகு க. அன்பழகன் அவர்கள், தமிழக வரலாறும் _ பெரியாரும் எனும் தலைப்பில் சென்னைப் பல்கலைக் கழகம் தந்தை பெரியார் மன்றத்தில் வழங்கினார்.

சுலபத்தில் உணர்ச்சிவயப்படாத பேராசிரியர் அவர்கள் தமது தொடக்கத்திலேயே ஒன்றைக் குறிப்பிட்டார். அய்யாவைப்பற்றிக் குறிப்பிடும்பொழுது, நானே உணர்ச்சிவயப்படும் இடங்கள் ஏற்பட்டு-விடுமோ என்று துணுக்குறுவதாகக் குறிப்பிட்டார்.

உண்மையைச் சொல்லவேண்டுமானால், தந்தை பெரியார் அவர்கள்பற்றி பேராசிரியர் எடுத்துக் கூறிய தகவல்களும், எடுத்துக்கூறிய விதமும் கேட்போர் கண்களைக் கசியச் செய்தது என்பதுதான் உண்மை.

தந்தை பெரியாரைப்போல உலகத்தில் ஒரு தலைவர் கிடையாது என்று அவர் கூறியதில் அளப்பரிய அழுத்தம் இருந்தது.

அவர்தம் உரையமுத மழையில் தெறித்த சில முத்துகள் இதோ:

1. வேறு பொருள் என்றால் தங்குதடையின்றி என்னால் பேச முடியும். ஆனால், அய்யா அவர்-களைப்-பற்றியல்லவா பேசுகிறேன். நிதானித்து உணர்ச்சி-வயப்படாமல் பேசவேண்டும் என்று நினைக்கிறேன்.

2. எனக்குக் கிடைத்த எல்லா வாய்ப்புகளும், பேறுகளும் தந்தை பெரியாரால்தான் கிடைத்தன. சிறு குழந்தையாக நான் இருந்தபோதே எனது மாமா மாயவரம் நடராசன் அவர்களின் இல்லத்தில் எனது தந்தையாரோடு சென்று பெரியாரைப் பார்த்து வியந்து போயிருக்கிறேன்.

மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் காவிரியாற்று மணலில் பெரியார் பேசுவார். இரண்டு லைட்டுகள் இருக்கும். அவை பெட்ரோமாக்ஸ் விளக்குகள் அல்ல; அரிக்கேன் லைட்டுகள்.

ஒலி பெருக்கிக் கிடையாது. நூறு பேர் கூடியிருப்பார்கள். அதில் உரக்கப் பேசுவார் பெரியார்.

உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் காலம் வரைகூட பெரியார் பேச்சின் கருத்துகள் எனக்குப் புரிந்திருக்கும் என்று சொல்ல முடியாது. அடுத்தடுத்து அண்ணா-மலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதுதான் அய்யாவின் கருத்துகளைப் புரிந்துகொள்ளும் பக்குவம் பெற்றேன்.

பல்கலைக் கழகத்தில் பேசவும் ஆரம்பித்தேன். குடிஅரசு இதழில் வரும் கட்டுரைகளைப் படிப்பேன். அவற்றைப் பரிமாறுவேன். ஆனால், இப்பொழுது நான் பேசும் பேச்சுக்குப் பொறுப்பேற்க வேண்டி-யுள்ளவனாக இருக்கிறேன்.

3. அந்தக் காலத்துச் சமுதாய அமைப்பு எப்படி-யி-ருந்தது? மயிலாடுதுறைக்கு கிராமப் பகுதிகளி-லிருந்து வரும் ஆதிதிராவிடர்கள் டாக்டர் சாமி வீட்-டுக்குப் போகிறேன். வக்கீல் சாமி வீட்டுக்குப் போகிறேன் என்றுதான் சொல்லுவார்கள். பார்ப்பனர்-களை சாமி போட்டுதான் பேசுவார்கள்.

இன்றைக்குத் தமிழன் என்றால் புரிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழன் வளர்ந்து கொண்டு வருகிறான். பெரியார் ஊட்டிய சுயமரியாதை உணர்வு தமிழர்களின் கண்களைத் திறக்கச் செய்துள்ளது.

4. எந்த அளவுக்குச் சமுதாய அரசியல் மாற்-றங்கள் நிகழ்ந்துள்ளன? பெரியாருக்கு தியாகி மான்-யம் அளிக்கப்படுமா என்று சட்டப்பேரவை உறுப்-பினர் ஒருவர் சட்டப்பேரவையில் வினா எழுப்பிய-போது, இந்த அமைச்சரவையே தந்தை பெரியா-ருக்குக் காணிக்கைதான் என்றார் முதலமைச்சர் அண்ணா.

காரணம் என்ன? பெரியார் இல்லையென்றால், இந்த அமைச்சரவை ஏது?

1967 இல் தி.மு.க. வெற்றி பெற்ற நிலையில், திருச்சியில் இருந்த தந்தை பெரியாரைக் காணவேண்டும் என்று அண்ணா விரும்பினார். தேர்தலில் நமக்கு எதிர்ப்பாக இருந்தார்; நம்மையெல்லாம் திட்டியிருக்கிறார் பெரியார் என்று சிலர் சொன்னபோதுகூட அண்ணா நிதானமாகச் சொன்-னார், அவர் இல்லையென்றால் நாம் எங்கேயப்பா? என்றுதான் சொன்னார்.

5. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக டாக்டர் அம்பேத்கர் பாடுபட்டார் என்றால், தாழ்த்தப்பட்ட மக்களையும் தாண்டி பிற _ புற சமூகத்தவர்கள் மத்தியிலும் விழிப்-புணர்வை ஏற்படுத்தியதன்மூலம் தந்தை பெரியார் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள்மீதான தாழ்நிலையைப் போக்க முனைந்தார்.

6. டாக்டர் கால்டுவெல் 30 ஆண்டுகள் இங்கு தங்கி தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளைப் பயின்று ஒப்பியல் நூலைத் தந்தார்.

வடமொழியிலிருந்து வந்ததுதான் தமிழ் _ திராவிட மொழிகள்_ என்ற எண்ணத்தை மாற்றியவர் கால்டுவெல். தமிழ் என்றால் நீச பாஷை என்றும், தமிழர்கள் என்றால் சூத்திரர்கள் என்றும் இழிவுபடுத்தப்பட்ட நிலை மாறத் தொடங்கியது.

தொடக்கக் காலத்தில் பிரச்சினை இல்லை _ இடையில் ஏற்பட்ட ஆதிக்கங்கள், ஊடுருவல்களால்தான் தமிழர்களுக்கு வீழ்ச்சி.

பல்லவர், களப்பிரர் காலத்தில் தமிழ், தமிழன்மீது ஆதிக்க நிலை உருவாக்கப்பட்டது.

திராவிடக் குடும்பம் என்ற ஒரு நிலையை நிறுவி-யதில் கால்டுவெல் அவர்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு.

இன்னும்கூட கருநாடக மாநிலத்தில் பழைய கன்ன-டம் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். அதில் பெரும் பங்கு தமிழ்தான்.

7. திராவிடன் என்று சொல்கிறபோதுதான் ஆரியன் என்ற இனத்தோடு எந்த வகையிலும் ஒட்டாதவன் என்ற பொருள் கிடைக்கும்.

8. நாம் திராவிடன் என்று சொல்லும்போதுதான் தமிழன் என்பதற்குப் பாதுகாப்பு உண்டு. திராவிடன் என்று சொன்னால்தான் தமிழன் முழுமை பெறுவான். இன்றைக்கு திராவிடனாகிய தமிழன் செல்வாக்குப் பெற முடிகிறது என்றால், அதற்குக் காரணம் தந்தை பெரியார்தான்.

அறிஞர்கள், புலவர் பெருமக்கள் என்போருக்கும், பொதுமக்களுக்கும் தொடர்பு கிடையாது. அந்த மக்க-ளோடு ஒரு தொடர்பை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார்.

9. திராவிடர்கள் என்று நாம் சொன்னபோது நீங்-களும் அந்த ஆதிதிராவிடர்களோடு சேர்ந்துவிட்டீர்-களா? என்று கேட்டவர்கள் உண்டு. திராவிடர்கள் என்று சொன்னால், ஆதிதிராவிடர்கள் என்ற பொருளைத்தான் எடுத்துக் கொள்வார்கள். நான்கூட அப்பொழுது சொன்னதுண்டு. ஆதிதிராவிடர் என்றால், அதில் ஒன்-றும் குறை கிடையாது. ஆதி முதல் இந்த நாட்டுக்குச் சொந்தக்காரர்கள் அவர்கள்தான் _ மீதி திராவிடர்கள் என்றால், அதில் கொஞ்சம் குறைவுதான் என்று பதில் சொல்லியிருக்கிறேன்.

10. பகுத்தறிவு இயக்கம் என்றால், படித்தவர்கள் மத்தியில்தான் என்ற நிலைப்பாடு உலகம் முழுவதும் உண்டு _ மேற்கு நாடுகளில் முக்கியமாக உண்டு. ஆனால், தமிழ்நாட்டில் பகுத்தறிவு இயக்கத்தை, அதன் கொள்கைகளை பாமர மக்கள் மத்தியிலும், கிராமப்புற மக்கள் மத்தியிலும் கொண்டு சென்றவர் தந்தை பெரியார்தான்.

11. இறைவழிபாட்டை மய்யப்படுத்தி பார்ப்பனப் புரோகித ஆதிக்கம் உருவாக்கப்பட்டது. இதனை Hindu Imperialism என்று சொல்லுவார்கள்.

புரோகித செல்வாக்கை உண்டுபண்ணுவதுதான் இந்தப் புரோகித மதம். இந்து என்ற பெயர்கூட பிறகு வந்ததுதான்.

இதுகுறித்து மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார்-கூடக் கூறியிருக்கிறார்:

நல்லவேளை வெள்-ளைக்-காரன் வந்து நம்மையெல்லாம் இந்து என்று அழைத்தான். நாமும் தப்பித்தோம் என்று கூறியுள்ளார்.

இந்தப் புரோகித ஆதிக்கத்தை மக்களுக்கு எடுத்துச் சொன்னவர் பெரியார் _ அந்த ஆதிக்-கத்தை ஒழித்தவரும் அவர்தான்..

12. தந்தை பெரியார் சுயசிந்தனையாளர். எதையும் ஏன்? எப்படி? என்று கேட்டு, கேட்டு அதன் உண்மைத் தன்மையை அறிவது என்பது தந்தை பெரியார் அவர்களுக்கு இயற்கையாக அமைந்துவிட்ட ஒன்று.

எல்லாம் உன் தலைவிதி என்று அடக்கப் பார்த்தார்கள். தலைவிதி என்றால் என்ன என்று வினா தொடுக்க ஆரம்பித்தார்.

எந்தச் சூழ்நிலையும் அவரை அடிமைப்படுத்திட முடி-யாது. எதுவும் அவரை ஆதிக்கம் செலுத்த முடியாது.

13. காங்கிரஸ் என்றால் அது ஒரு வைதீகப் பிடிப்-பில்தான் இருந்தது. காங்கிரஸ் ஒழிக என்று ஆரம்பித்-தார். அந்தக் காங்கிரசிலிருந்தும் வெளியேறினார்.

14. பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்புவது, பேசுவது, விவாதிப்பது என்பது தந்தை பெரியாருக்கு மகிழ்ச்சி-யூட்டக் கூடியது. அது அவருக்கு ஒரு என்ஜாய்மென்ட்!

மூட நம்பிக்கைகளை எதிர்ப்பது பெரியாருக்கு உற்சாகத்தைக் கொடுக்கக் கூடியது.

ஜாதி இழிவை எதிர்த்துப் பேசுவது பெரியாருக்கு இன்பத்தை அளிக்கக் கூடியது. அந்த மகிழ்ச்சியும், உற்-சாகமும்தான் தந்தை பெரியார் அவர்களுக்கு ஆரோக்கியத்தைத் தந்தது. விமீஸீணீறீ ஸிமீறீவீமீயீ என்பது அய்யாவுக்குப் பகுத்தறிவைப் பிரச்சாரம் செய்வதுதான்.

உபாதைகளையெல்லாம்கூட தூரத் தள்ளியது. உடல் நலனுக்கு மன நலன் என்பதும் மிக முக்கியமான ஒன்றே.

15. நான் என் சிந்தனைக்குப் பட்டதைச் சொல்ல எனக்கு உரிமை உண்டு. அதனை ஏற்பதோ, தள்ளுவதோ மற்றவர்களுக்கு உரிமை உண்டு என்பவர் பெரியார்.

16. நான் தீர்மானிப்பதுதான் சரி _ மற்றவர்கள் அதனை ஏற்றுத் தீரவேண்டும், அந்த நிலைதான் நம் கொள்கைக்குப் பாதுகாப்பு என்று கருதியவர் பெரியார்.

மணியம்மையாரைத் திருமணம் செய்துகொண்டது-கூட அந்த எண்ணத்தின் அடிப்படையில்தான். தனக்குப் பிறகு இந்த இயக்கம் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்ற எண்ணம் பெரியாரை அந்த முடிவுக்கு இட்டுச் சென்றது.

17. பெரியாருக்கும், அண்ணாவுக்கும் உள்ள வேறுபாடு என்ன? பெரியார் தாம் நினைத்ததை, சிந்தித்-ததை மற்றவர்களும் ஏற்கவேண்டும் என்று கருதியவர். அண்ணாவோ, ஜனநாயக முறைப்படி பல நேரங்களில் விட்டுக் கொடுத்துச் செல்லக்கூடியவர்.

பெரியார் எதிர்நீச்சல் போட்டு வெற்றி காணக்-கூடி-யவர்; கரையேறக் கூடியவர். அறிஞர் அண்ணாவோ வெள்ளத்தோடு சென்று கரையேறக் கூடியவர்.

18. தனி மனிதர் என்று எடுத்துக்கொண்டால், பெரியாருக்கு இணையாக உலகில் வேறு எந்தத் தலைவரையும் கூறவே முடியாது.

19. பெரியார் யாரை ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அதனால் தமிழர்களுக்கு என்ன நன்மை? காம-ராசரை ஆதரித்தால் தமிழர்களுக்கு நன்மை என்-றால், அண்ணாவையும் எதிர்ப்பார். அவர் எடுத்துக்-கொண்ட இலக்குதான் அவருக்கு முக்கியமே தவிர, மற்றவையல்ல!

20. பெரியார் மெல்ல மெல்ல வெற்றி பெற்றுதான் வந்திருக்கிறார்.

நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தபோது 300 மாணவர்கள் பார்ப்பனர்கள் என்-றால், 100 மாணவர்கள்தாம் பார்ப்பனர் அல்லாதார்! இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதா, இல்லையா?

பெரியார் போராடி, மற்றவர்களும் அவருக்குத் துணை நின்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீடுக்காக முதல் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வராவிட்டால், நம் மக்களின் நிலை என்ன?

21. பெரியார்தான் தமிழனைக் கண்டுபிடித்தார். இதே பல்கலைக்கழகத்தில் தமிழுக்காகப் போராடவேண்டிய காலகட்டம் இருந்தது. மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் தெரிந்திருக்க-வேண்டும் என்ற நிபந்தனைகூட இருந்தது.

அந்த முட்டுக்கட்டை எப்பொழுது மாறியது? மாற்றத்திற்குக் காரணம் யார்? அதை இன்றைக்குத் தமிழர்கள் உணராமல் இருக்கிறார்களே, அதுதான் ஆச்சரியமானது! என்றார் இனமானப் பேராசிரியர்.

விழாவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமை தாங்கினார். சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளர் பேராசிரியர் முனைவர் சரவணன் வரவேற்புரையாற்றினார். பேராசிரியர் முனைவர் வீ. அரசு நன்றி கூறினார்.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் தி50 என்றால், கூட்டங்கள் நடைபெறும் மாநாட்டு அரங்கைக் குறிக்கும். துணைவேந்தர் திருவாசகம் அவர்கள் அந்த மன்றத்திற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டியுள்ளார் என்பது மகிழ்ச்சிக்கும், பாராட்டுக்கும் உரிய ஒன்றாகும்.

அந்த தந்தை பெரியார் அரங்கில்தான் இந்த நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பேராசிரியர் அவர்களுக்குத் தமிழ்த்துறை சார்பிலும், திராவிடர் கழகத்தின் சார்பிலும் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பெரியார் களஞ்சியம் குடிஅரசு தொகுதிகள் ஆறினையும் வழங்கினார். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களுக்குப் பல்கலைக் கழகப் பதிவாளர் பேராசிரியர் சரவணன் சால்வை அணிவித்தார்.

மன்றமே நிறைந்து வழிந்தது; பல்துறைகளைச் சார்ந்த பெருமக்களும், பல்கலைக் கழக மாணவ, மாணவிகளும், கழகத் தோழர்களும் கூடியிருந்தனர். இந்த மன்றத்தில் கூடிய பெரிய கூட்டம் இது என்று கருதப்படுகிறது.

- மின்சாரம் -

திராவிடர் மாணவர் எழுச்சி மாநில மாநாட்டுச் சிந்தனை! ஆரியம் அண்டா பெருவெடிப்புத் தத்துவம்!


மாணவர் கழக எழுச்சி மாநாட்டின் தொடர்ச்சி-யாக மாலையில் சென்னைப் புரசைவாக்கம் தாணா தெருவில் திறந்தவெளி மாநாடாக நடைபெற்றது (16.4.2010).

மாநாட்டில் பெரியார்_ களஞ்சியம் குடிஅரசு தொகுதிகள் நான்கு (1929 மற்றும் 1930 ஆம் ஆண்டுகளுக்குரியது) வெளியிடப்பட்டன. இதையும் சேர்த்து 1925 முதல் 1930 வரை 11 குடிஅரசு தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

காலத்தின் கருத்துக் கண்ணாடியான குடிஅரசு தொகுப்பு ஒவ்வொரு தமிழன் இல்லத்திலும் அணி செய்யவேண்டியது மட்டுமல்ல _ ஒவ்வொரு பக்கமும் படிக்கப்பட வேண்டியது _ இன்னும் சொல்லப்-போனால் மனப்பாடம் செய்யவேண்டிய பகுதிகளும் உண்டு.

மனப்பாடம் செய்யும் ஒரு முறையைப் பார்ப்-பனியம் வகுத்துக் கொடுத்தது _ கண்மூடித்தனமாக ஆன்மிகக் குழியில் விழுவதற்கு; அந்தக் குழியிலிருந்து மீள்வதற்கு இந்த மனப்பாடங்கள் தேர்ந்தெடுத்த கனமான ஊன்றுகோல்கள் ஆகும்.

1949 ஆம் ஆண்டு வரைக்கான பெரியார் களஞ்சியம் குடிஅரசு தொகுப்புகள் மிக விரைவில் அனைத்தும் வெளிவந்து _ புதிய தலைமுறையினர் மிகச் சிறந்த வெளிச்சத்தைக் கொடுக்கப் போகிறது.

எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் குடிஅரசு தொகுதிகளை வெளியிட, வணக்கத்-திற்குரிய சென்னை மேயர் ம. சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து எஸ்.டி. கூரியர்ஸ் உரிமையாளர் நவாஸ்கனி குடிஅரசு தொகுதிகளைப் பெற்றுக்-கொண்டார்.

சைதை பகுதியில் பகுத்தறிவாளர் கழகத்தில் இணைந்து பணியாற்றிய அந்த இளைஞர்தான் இன்றைய சென்னை மேயர் என்பது பெருமைக்-குரியதாகும்.

இந்த நிகழ்ச்சி என் வாழ்நாளில் மறக்க முடி-யாதது. இந்நாளை என்றும் நான் மறவேன்.

இங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளைக் கண்-டேன், களித்தேன். அவற்றைக் காண கண்கோடி வேண்டும்.

மாணவர் மத்தியில் திராவிடர் இயக்கத்திற்குச் செல்வாக்கில்லை என்று சொல்பவர்கள் இந்த மாநாட்டைக் கண்ட பிறகு தங்களைத் திருத்திக் கொள்வார்கள் என்றார் மேயர்.

நமது ஆசிரியர் அவர்கள் எங்கு பேசினாலும் அங்கெல்லாம் மாணவர் பருவத்தில் சென்று கேட்டவன் நான். பகுத்தறிவு இயக்கத்தில் நான் ஈடுபட காரணமாக இருந்தவர் நமது ஆசிரியர்தான் என்று குறிப்பிட்டார்.

சென்னை மாநகர வணிக நிறுவனங்களில் தமிழுக்கு உரிய இடம் இல்லை. தமிழ்நாட்டு வீதியில் தமிழ்தான் இல்லை என்று அன்று புரட்சிக்கவிஞர் பொங்கி எழுந்தார்.

வாணிகர் தம் முகவரியை வரைகின்ற பலகையில் ஆங்கிலமா வேண்டும்? மாணுயர்ந்த செந்தமிழால் வரைக என அன்னவர்க்குச் சொல்லவேண்டும் என்றார் புரட்சிக்கவிஞர் தமிழியக்கத்தில். அதனைச் செயல்படுத்தும் நோக்கில் மே 31 ஆம் தேதிக்குள் மாநகரத்தில் உள்ள அத்தனை வணிக நிறுவனங்களிலும் பெரிய எழுத்துக்களில் தமிழில் எழுதவேண்டும் என்று ஆணை பிறப்பித்திருப்பதை மேயர் அவர்கள் எடுத்துச் சொன்னபொழுது, பெரிய ஆரவாரம்!

வடசென்னை மக்களவை உறுப்பினரும், தத்துவமேதை டி.கே. சீனிவாசன் அவர்களின் அருமை மைந்தனும், சிறந்த கொள்கைவாதியுமான டி.கே.எஸ். இளங்கோவன் ரத்தினச் சுருக்கமாக தமது உரையில் சில முக்கிய கருத்துகளைப் பதிவு செய்தார்.

திராவிடர் இயக்கத்திற்கு வாரிசு இல்லாமல் போக-வில்லை என்பதற்கு இந்த மாநாடு எடுத்துக்காட்டு என்று எடுத்த எடுப்பிலேயே கூறினார்.

தந்தை பெரியார் கொள்கைக்கோ, இயக்கத்துக்கோ சரிவு ஏற்பட்டுவிட முடியாது.

விவாதத்துக்காக, இந்தக் கொள்கைக்குச் சரிவு ஏற்படுகிறது என்று சொன்னால், அது தந்தை பெரியா-ருக்கோ, இந்த இயக்கத்திற்கோ சரிவு என்று பொருள் அல்ல _ இந்தச் சமுதாயத்துக்கு ஏற்பட்ட சரிவு என்று பொருள், என்று மிகச் சரியாகக் கணித்துச் சொன்னார்.

எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தன் உரையில் தனது பொதுவாழ்வு பெரியார் திடலிலிருந்து தொடங்கிய ஒன்று என்று குறிப்பிட்டார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் நான் கலந்துகொள்ளும் வாய்ப்பை தமிழர் தலைவர் அருளியதாகப் பெருமைப்பட குறிப்பிட்டார். நானே சென்று அடைக்கலம் அடைந்த இடம் பெரியார் திடல் _ பாசறை என்பதை நன்றியுணர்ச்சியுடன் புலப்-படுத்தினார்.

பெரியார் திடலும், வாசகர் வட்டமும் மாணவப் பரு-வத்தில் தம்மைச் செம்மைப்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

நான் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கொள்-கையை ஏற்றுக்கொண்டவன். பின்பற்றுபவன் என்றாலும், நமக்குப் பெரியாரியலே அடிப்படை என்பதை அழுத்தந் திருத்தமாகப் பதிவு செய்தார்.

மறைமலை நகரில் விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய விழாவில் தமிழர் தலைவர் கூறிய ஒரு கருத்தை மிக முக்கியமாகக் கருதி அதனை இம்மாநாட்டில் வலி-யுறுத்தினார்.

திராவிடர் கழகம், தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் இம்மூன்றும் திரிசூலங்கள் அல்ல_ முத்தமிழ் என்று இலக்கிய நயத்துடனும், கொள்கை நயத்துடனும் மறை-மலை நகர் விழாவில் தமிழர் தலைவர் சொன்னதை முதல்வர் கலைஞர் வழிமொழிந்து அதே விழாவில் பேசினார். அதை இந்த மாநாட்டிலும் தாம் வலியுறுத்து-வதாகக் குறிப்பிட்டார் எழுச்சித் தமிழர்.

இது ஒரு மிக முக்கியமான கருத்தாகும். தமிழ்-நாட்-டுக்கு மட்டுமல்ல _ இந்தியத் துணைக் கண்டத்துக்கு மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து போராடவேண்டும் என்பது உலகளாவிய கருத்தாகும்.

இந்தியத் துணைக் கண்டத்தைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்-மையினர் ஒன்று சேருவதன் மூலமாகத்தான் தலைவிரித்தாடும் நீண்ட கால சமுதாயக் கொடுமைக்கான விடுதலை கிடைக்கும்.

மறைமலை நகர் விழாவும், சென்னை திராவிடர் மாணவர் கழக எழுச்சி மாநாடும், இந்தக் கருத்தை காலம் கருதி மீண்டும் பதிவு செய்தது என்று சொல்லவேண்டும்.

தமிழர் தலைவர்

நிறைவுரையில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் சில முத்துக்களைப் பதித்தார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பத்து தீர்மானங்களும் மிகவும் அரியவை. இந்தக் காலகட்டத்தின் தேவைகளை நிறைவு செய்யக்கூடியவை.

1929 இல் செங்கற்பட்டில் நடைபெற்ற மாகாண முதல் சுயமரியாதை மாநாடு தொடங்கி, இதுவரை நிறை-வேற்றப்பட்ட அத்தனைத் தீர்மானங்களும் பிற்காலத்தில் அரசின் சட்டங்களாக, திட்டங்களாக மலர்ந்ததை தமிழர் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இந்த இயக்கம் மாணவர் இளைஞர்களின் பாசறை என்று நிரூபிக்கப்பட்டு இருப்பதை பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இளைஞர்களை சட்டமன்றத்துக்கு அழைக்கக்-கூடிய இயக்கமல்ல _ மாறாக சிறைச்சாலைக்கு அழைக்கக்கூடியது என்று கூறியபோது, ஆரவார-மான வரவேற்பு!

இந்தியாவில் நிகழும் மனுதர்மக் கண்ணோட்-டத்தைப் பொருத்தமாக எடுத்துக்காட்டினார். மாவோயிஸ்டுகளைத் தீவிரவாத இயக்கம் என்று கூறி நடவடிக்கைகளை எடுக்கிறார்களே, மதவாதம் என்ற பெயரால் தீவிரவாத அரசியலை நடத்திவரும் சங் பரிவார், பி.ஜே.பி.மீது அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படாதது ஏன் என்ற வினாவை எழுப்பினார்!

சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலத்தை ஒரு பட்டப் பகலில் பல்லாயிரவர் கூடி அடித்து நொறுக்கியவர்கள் தீவிரவாதிகளா? பயங்கரவாதிகளா? 18 ஆண்டுகள் ஓடிய பிறகும் குற்றவாளிகள் ராஜநடை போட்டுத் திரிவதைத்தான் தமிழர் தலைவர் அவ்வாறு சுட்டிக்காட்டினார்.

காவல்துறை அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கத் தவறினாலும் கருஞ்சட்டைப் பட்டாளம் மதவாதக் கும்பலை மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டும் என்று கம்பீரமாகச் சொன்னார்.

தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக மாணவரணி தலைவர் தி.இர. சிவசாமி நன்றியுரையுடன் இரவு 10.30 மணிக்கு எழுச்சிமிகு மாநாடு நிறைவுற்றது.

குறுகிய காலத்தில் கல்லூரி, பல்கலைக் கழகங்களின் தேர்வும் நிறைவு பெறாத காலகட்டத்தில், தமிழ்நாடு தழுவிய அளவில் மாணவர்கள் பொங்கி வந்தனர் _ பெரியார் என்னும் பெருங்கடலின் அலைகள் ஓயப் போவதில்லை _ புயல்களை உரு-வாக்கும். தேவைப்பட்டால் பிற்போக்குச் சக்திகளை விழுங்கும் சுனாமிகளையும் தோற்றுவிக்கும்.

இனமானத்துக்குத் திராவிடர்!

மொழி மானத்துக்குத் தமிழர்!

இந்த இரட்டைக் கிளவித் தத்துவம்தான் ஆரியம் அண்டாப் பெருவெடிப்புத் தத்துவம்.

மாணவர் கழக மாநாட்டின் செய்தி இதுதான்!


- மின்சாரம் -

திராவிடர் மாணவர் எழுச்சி மாநில மாநாட்டுச் சிந்தனை! பேரணி- கலை நிகழ்ச்சிகள்- தந்திரக் கலை இவற்றின் அணிவகுப்பு


திராவிடர் கழகம் நடத்தும் நிகழ்ச்சிகளில் பேரணி என்பது தனித்தன்மை வாய்ந்தது. கும்பலாகச் செல்லுவது _ வாய்க்கு வந்தவாறு முழக்கமிடுவது என்பதெல்லாம் திராவிடர் கழகத்தில் கிடையாது.

வரிசையாக அணிவகுத்து நிற்பார்கள். பெரியார் பிஞ்சுகள், மகளிர் அணி, அடுத்துக் கழகத் தோழர்கள் தங்களுக்குரிய பதாகைகளைத் தூக்கிப் பிடித்து பட்டாளத்துச் சிப்பாய்போல வீறுநடை போட்டு வருவார்கள்.

முழக்கங்கள் தலைமைக் கழகத்தின் சார்பில் அச்சிடப்பட்டு, அதில் கண்டுள்ளவைகளைத் தவிர வேறு முழக்கங்கள், கொச்சையான சொற்களுக்கு இடம் இருக்கக்கூடாது என்பதில் கழகம் எப்பொழுதுமே கவனமாக இருந்து வருகிறது.

மாநாட்டு நிகழ்ச்சிகளை நேரடியாகக் கண்டு கருத்துகளைக் கேட்க வாய்ப்பில்லாத பொதுமக்கள் மத்தியில் கழகக் கருத்துக்களைக் கொண்டு செல்-லவே இந்தப் பேரணி என்பது கழகத்தின் நிலைப்பாடு!

திராவிடர் கழகத்தின் கொள்கைகள், நாட்டில் நிகழும் நிகழ்ச்சிகளின்மீது கழகத்தின் கருத்து இவற்றை விளக்குவதாக அந்த முழக்கங்கள் இருக்கும். வேறு எந்த அமைப்புகளின் பேரணியிலும் கண்டிட முடியாத திராவிடர் கழகத்திற்கே உரித்தான நேர்த்தியான அம்சம் இது.

மகளிர் தீச்சட்டி ஏந்தி வருவார்கள். கோயில்களில் தீச்சட்டி எடுப்பதுண்டு. அதற்குக் கூறப்படும் காரணம் _ கடவுள் சக்தியாம்!

அப்படிஒருசக்தி உண்டா? உண்மையிலே இருக்-கிறதா? கடவுள் சக்தியாவது வெண்டைக்-காயாவது!

இதோ பார் கடவுள் இல்லை _ இல்லவே இல்லை என்று நாங்கள் தீச்சட்டியை ஏந்திக் காட்டுகிறோம் என்பதற்கான செயல்முறை விளக்கம்தான் கழக மகளிர் தீச்சட்டி ஏந்திவரும் நிகழ்ச்சி.

தீச்சட்டி இங்கே! மாரியாத்தாள் எங்கே? என்று பெண்கள் தீச்சட்டி ஏந்தி முழக்கமிட்டு வரும்போது, பொதுமக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் கவனிக்-கிறார்கள் _ வைத்த விழி அசையாமல் அதிர்ந்து போய் பார்க்கிறார்கள்.

பார்வையாளர்கள் பெரும்பாலும் பக்தர்கள்தானே! அவர்களின் சிந்தனையில் ஒரு பொறியைத் தட்டிக் கிளப்புவதற்கு இந்தச் செயல்முறை பெரிதும் பயன்படும் என்பதில் அய்யமில்லை.

கோயிலில் தீச்சட்டி எடுப்பதாக இருந்தாலும் சரி, பகுத்தறிவாளர்கள் தீச்சட்டி ஏந்துவதாக இருந்தாலும் சரி மண் சட்டியின் அடியில் எளிதில் வெப்பம் கடத்தாத உமி, மணல் போன்ற பொருள்களைப் போட்டுத்தான் வைப்பார்கள்.

யாரும் வெண்கலச் சட்டியில் தீ வார்த்துத் தூக்கிச் செல்ல முடியாது. தீக்குண்டம் இறங்குவதும் அப்படித்-தான்!

விறகை நெருப்பாக்கி, அதன்மீது நடந்து செல்ல முடியுமே தவிர, இரும்புத் தகட்டைச் சூடாக்கி எட்டுக்-குடி முருகனுக்கு வேல்! வேல்! என்று கூவி நடந்து செல்லவே முடியாது. இரும்புக்கும், விறகுக்கும் வெப்பம் கடத்தும் அளவில் வேறுபாடு உண்டு.

கடவுள் சக்தி என்று கூறி மக்களை நம்ப வைப்ப-தற்காக தீக்குண்டம் போன்ற பாமரத்தனமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறார்கள்.

அலகுக்குத்தி கார் இழுப்பதும் அப்படித்தான். முதுகில் இயங்கா சதையில்தான் அலகைக் குத்துவார்கள். மார்பில் குத்தி சப்பரத்தை கோயிலில் இழுப்பதுதானே?

மக்கள் மத்தியில் மண்டிக் கிடக்கும் மூடச் சகதிகளை விரட்டியடிப்பதற்காக, அதே காட்டுமிராண்டி செயல்களை பகுத்தறிவுவாதிகளும் செய்து காட்டித் திருத்தவேண்டியுள்ளதே _ என்ன செய்ய! முள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டியுள்ளது!

அதேபோல, கோயில் பூசாரி அரிவாள்மீது ஏறி நின்று தனக்குத் தனியாகக் கடவுள் சக்தி என்ற கை முளைத்-திருக்கிறது என்று காட்டிக்கொள்ள முயற்சிப்பார். பளபளக்கும் அரிவாள்மீது ஏறி நின்று அசத்துவார்!

அதே செயலை கருஞ்சட்டைத் தோழர்கள் கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று முழக்கமிட்டு கூரிய அரிவாள்மீது ஏறி நின்று காட்டி, பொதுமக்களின் மத்தியில் கொஞ்சம் சொரணையை, சிந்தனைத் தூண்டு-தலை ஏற்படுத்துவார்கள். வழக்கறிஞரான உரத்தநாடு அ. அருணகிரி, அட்டகாசமாக பளபளக்கும் அரிவாள் சுனையில் ஏறி நின்று அசத்தினார். குறிப்பாக, இளை-ஞர்கள், மாணவர்கள் மத்தியில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

அண்மையில் ஈரோடு மாவட்டம் பண்ணாரியில் மாபெரும் தீக்குண்டம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து திரா-விடர் கழகத் தோழர்கள் தீக்குண்டத்தில் இறங்கிக்-காட்டி அந்த வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திவிட்டனர்.

பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழா _ அதன் தீமிதி என்பது அந்த வட்டாரத்தில் பிரசித்தமானது. அந்த மாயையை உடைத்துக்காட்டவே அப்படி ஒரு நிகழ்ச்சியைக் கழகம் அங்கு அரங்கேற்றியது. அதன் பலன் கைமேல்! ஏராள இளைஞர்கள் இயக்கத்தை நோக்கி அந்தப் பகுதியில் வந்துகொண்டுள்ளனர்.

திராவிடர் கழகத்தின் மூட நம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரத்தில் மந்திரமா? தந்திரமா? என்ற நிகழ்ச்சி மிக முக்கியமானது.

மந்திரசக்தி என்றும், கடவுள் அருள் என்றும் கூறி சில தந்திரக் காட்சிகளைச் செய்து காட்டி, இது மந்திரத்தின் வலிமை என்று பொதுமக்களை மயக்குவார்கள்.

பாமர மக்கள் மந்திரவாதிகள் என்று சொல்லப்-பட்டவர்கள் விரிக்கும் வலையில் விழுந்து விடுவார்கள்.

புட்டபர்த்தி சாயிபாபா இந்த வகையில் பெரிய அளவு விளம்பரம் பெற்ற சாதாரண மனிதர்தான்.

புட்டபர்த்தி சாயிபாபா செய்துகாட்டும் அத்தனை மாயா ஜாலங்களையும் கழகத்தில் பயிற்சி பெற்ற இளை-ஞர்கள் சர்வ சாதாரணமாக செய்துகாட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

தொடக்கத்தில் நீடாமங்கலம் புரபசர் டாக்டர் கே.ஆர். குமார் அவர்கள்தான் கழகத்தின் முன்னோடியாவார். (80 வயதைக் கடந்த முதுபெரும் பெரியார் பெருந்-தொண்ட-ராக திருவலஞ்சுழியில் வாழ்ந்து கொண்-டுள்ளார். அவரின் இணையர் ஜெயமணிக்குமார் அவர்-களும் இந்தத் தந்திர வித்தையில் கைதேர்ந்தவராக, கழகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டும் வருகிறார்).

சென்னை மாணவர் கழக மாநாட்டில் பிற்பகல் நிகழ்ச்சியில் இந்த மந்திரமல்ல, தந்திரமே! நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. செயங்கொண்டம் கலை-வாணன் _ கரூர் நெல்சன் குழுவினர் தொழில் ரீதியாக நடத்தும் தந்திரக் கலைஞர்களுக்கு நிகராக புதிய புதிய அம்சங்களை செய்துகாட்டி வியக்கச் செய்தனர்.

கலை நிகழ்ச்சிகள்

கலை நிகழ்ச்சிகளும், கழகத்திற்கே உரிய தனி அணிகலனாகும். பாடல்களும், விளக்கங்களும் கழகப் பிரச்சாரத்தின் வெற்றிக்குப் பெரும் துணையாக இருந்து வருகின்றன.

குடந்தை என்.ஜி. ராசன் குழுவினர், இராவணன் கலா நிகழ்ச்சி, மதுரை செல்வா _ கலைத்தூதன் குழு-வினர், பொன்னம்மாள் _ சேதுராமன் கலை நிகழ்ச்சி, செருநல்லூர் வீ.கே.ராமு இசைக்குழு, உடுக்கடி அட்ட-லிங்கம், அணைக்கரை டேப் தங்கராசு, கீழ்வேளூர் வேணுகோபால் இசைக்குழு, திருத்தணி பன்னீர்செல்வம் இசைக்குழு (இவர் முறையாக அரசு இசைக்கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றவர்) என்று கழகத்தின் வரலாற்றில் முத்திரை பொறித்த கலைக்குழுக்கள் தந்தை பெரியார் கொள்கைப் பயணத்தில் தங்கள் பங்களிப்பை வெகுவாகவே அளித்து வந்திருக்கின்றன.

வெறும் பாடகர்களாக மட்டும் இல்லாமல் கழகம் நடத்திய போராட்டங்களிலும் பங்கேற்று சிறைக்-கோட்டம் சென்றவர்களாகவும் அவர்கள் இருந்து வந்துள்ளனர் என்பது மேலும் பெருமைக்குரியதாகும்.

திராவிடர் கழகப் பொதுக்கூட்டங்கள் என்றால், தொடக்கத்தில் கழகத் தோழர்கள் கொள்கை முழக்கப் பாடல்களை உரத்த குரலில் பாடுவது வழக்கமாகும்.

இப்பொழுதுகூட இயக்கப் பிரச்சாரகர்களில் தோழர்கள் இராம. அன்பழகன், திருவாரூர் சு. சிங்காரவேலு, புவனகிரி யாழ் திலீபன் போன்றவர்கள் சிறந்த பாடகர்களாகவும் இருப்பதால், இவர்களின் சொற்பொழிவுகளில் இடை இடையே இசைப் பாடல்களும் இடம் பெறுவதால் பொதுமக்கள் மத்தி-யிலே ஓர் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.

நடந்து முடிந்த மாணவர் கழக மாநில மாநாட்டில் ஒரு நிகழ்ச்சிக்கும், இன்னொரு நிகழ்ச்சிக்கும் இடையே கொள்கைப் பாடல்கள் பாடப்பட்டன. ருசிய நாட்டில் இருக்கும் இந்த முறை கழக மாநாட்டில் பின்பற்றப்பட்டது _ பார்வையாளர்களை இந்த முறை வெகுவாகவும் கவர்ந்தது.

வீதி நாடகம்

திராவிடர் கழகப் பிரச்சாரத்தில் வீதி நாடகம் என்பது இப்பொழுது பொதுவாக பொதுமக்கள் மத்தியிலே பெரிதாகப் பேசப்படும் ஒன்றாகும்.

இடதுசாரிகள் கைகளில் இருந்த இந்தக் கலை இப்பொழுது திராவிடர் கழகத்தின் சார்பில் அடுத்தகட்ட பரிணாமமாக _ புதுமைகளின் சேர்க்கை-களோடு, நவீன யுக்திகளோடு மிகுந்த வரவேற்போடு வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

தெற்கு நத்தம் சித்தார்த்தன், பெரியார்நேசன் குழு-வினர் கழகப் பிரச்சாரத் திசையில் வீதி நாடகங்கள் மூலம் புதிய பொலிவுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

சென்னை தாணா தெருவில் நடைபெற்ற திறந்தவெளி மாநாட்டில் (16.4.2010) கழகத்தின் வீதி நாடகங்கள் பொதுமக்களைப் பெரிதும் கவர்ந்தன.

சென்னை மாநகரத் தந்தை வணக்கத்திற்குரிய மேயர் ம. சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் வீதி நாடகத்தை வெகுவாக ரசித்தனர், பாராட்டினர். தொடக்கத்திலேயே வராமல் போய்விட்டேனே என்று தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் எழுச்சித் தமிழர் திருமாவளவன்.

ஆரியர் வருகை, பார்ப்பனர்கள் சூழ்ச்சியும், மன்னர்கள் வீழ்ச்சியும், பாவ மன்னிப்பு, கிரிக்கெட் பைத்தியம், கதவைத் திற....... என்று ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து ஆடு, மாடுகளை ஓட்டி வந்து திராவிடர்களிடையே இல்லாத ஜாதியையும் வழிபாட்டு முறைகளையும், மூட நம்பிக்கைகளையும் புகுத்தியது முதல்_ காவி வேட்டிக் காமலோலன் நித்தியானந்தா பித்தலாட்டம்வரை தோலுரித்து சாறு பிழிந்து தூக்கி எறிந்துவிட்டனர்.

கதவைத் திற காற்றுவரும் என்று சொல்லுவதற்கு சாமியார்கள் தேவையா?

சுயமரியாதைக் கதவைத் திற _

பகுத்தறிவுக் காற்றுவரும் _

சுரணை வரும்

தன்மானம் வரும்

என்று கூறி முடித்த பாங்கு பலே பலே என்று பாராட்டத்தக்கதாக அமைந்திருந்தன.

பல்சுவை பாப்பாநாடு பாஸ்கர்

ஆயிரக்கணக்கில் கூடியிருந்த பார்வையாளர்களை தன் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்ட ஒருவர் உண்டென்றால், அவர்தான் பாப்பாநாடு பாஸ்கர்.

பல்சுவை மன்னன் என்று பட்டம் கொடுத்துவிடலாம். பாடலும், பல குரல் பேச்சும், விகடமும் மக்களை விழுந்து விழுந்து சிரிக்க மட்டுமல்ல, சிந்திக்கவும் வைத்தது.

பார்ப்பான் ஏன் தவில் அடிப்பதில்லை? பார்ப்பான் ஏன் நாதசுர இசை பக்கம் தலைகாட்டுவதில்லை? என்ப-தற்கு அறிவுப்பூர்வமான விளக்கங்களை அவர் தந்த-போது, ஆமாம், நீங்கள் சொல்லுவது உண்மைதான் என்று எல்லோரது தலைகளும் அசைந்தன.

தவில் வாசிப்பு, நாதசுரம் வாசிப்பு என்பது சாதாரணமல்ல, கடினமானது. அதிக உழைப்பை உள்வாங்கும் தன்மையது. உந்திக் கமலத்திலிருந்து ஊற்றெடுக்கவல்லது அல்லவா நாதசுரம். அதேநேரத்தில், பிடிலும், மிருதங்கமும், கஞ்சிராவும், மோர்சிங்கும் பார்ப்பனர் கைகளுக்குப் போனதன் காரணம் அந்த அளவுக்குக் கடும் உழைப்புக்கும், களைப்படைவதற்கும் தேவையற்றவை என்பதுதான்.

இவற்றை பாஸ்கர் வார்த்தைகளால் மட்டும் சொல்லவில்லை. பல குரலில் அவர் இசைத்துக் காட்டியது அடேயப்பா, பிரமாதம்! பிரமாதம்!!

ஒரு நாள் மாநாட்டில் இத்தனை அம்சங்களா? புதுமைகளா? வெற்றிகளா?

திராவிடர் கழகத்தால் மட்டுமே சாதிக்கப்படக் கூடியவை இவை. காரணம், முற்றிலும் கொள்கைவயப்பட்ட இயக்கம் இது! _ அதன் கொள்கை தோற்கப்பட முடியாதது _ தவிர்க்கப்பட முடியாதது! மூச்சுக் காற்று வேண்டாம் என்று சொல்கிற முற்றும் துறந்த முனிவர்கள் உண்டா?

கழகத்தின் கொள்கைகளைக் கடைப்பிடிக்க முடியவில்லையே என்று ஏங்குகிற மக்கள் உண்டு; அதேநேரத்தில் இந்தக் கொள்கை கூடாது, தேவையற்றது என்று சொன்ன காலம் மலையேறிவிட்டது. இது காலத்தின் கட்டாயம்!

- மின்சாரம் -

[ விடுதலை நாளிதழ் 19.04.2010 ]