கேட்டவை கிடைக்குமிடம்:

Wednesday, April 28, 2010

திராவிடர் மாணவர் எழுச்சி மாநில மாநாட்டுச் சிந்தனை! பேரணி- கலை நிகழ்ச்சிகள்- தந்திரக் கலை இவற்றின் அணிவகுப்பு


திராவிடர் கழகம் நடத்தும் நிகழ்ச்சிகளில் பேரணி என்பது தனித்தன்மை வாய்ந்தது. கும்பலாகச் செல்லுவது _ வாய்க்கு வந்தவாறு முழக்கமிடுவது என்பதெல்லாம் திராவிடர் கழகத்தில் கிடையாது.

வரிசையாக அணிவகுத்து நிற்பார்கள். பெரியார் பிஞ்சுகள், மகளிர் அணி, அடுத்துக் கழகத் தோழர்கள் தங்களுக்குரிய பதாகைகளைத் தூக்கிப் பிடித்து பட்டாளத்துச் சிப்பாய்போல வீறுநடை போட்டு வருவார்கள்.

முழக்கங்கள் தலைமைக் கழகத்தின் சார்பில் அச்சிடப்பட்டு, அதில் கண்டுள்ளவைகளைத் தவிர வேறு முழக்கங்கள், கொச்சையான சொற்களுக்கு இடம் இருக்கக்கூடாது என்பதில் கழகம் எப்பொழுதுமே கவனமாக இருந்து வருகிறது.

மாநாட்டு நிகழ்ச்சிகளை நேரடியாகக் கண்டு கருத்துகளைக் கேட்க வாய்ப்பில்லாத பொதுமக்கள் மத்தியில் கழகக் கருத்துக்களைக் கொண்டு செல்-லவே இந்தப் பேரணி என்பது கழகத்தின் நிலைப்பாடு!

திராவிடர் கழகத்தின் கொள்கைகள், நாட்டில் நிகழும் நிகழ்ச்சிகளின்மீது கழகத்தின் கருத்து இவற்றை விளக்குவதாக அந்த முழக்கங்கள் இருக்கும். வேறு எந்த அமைப்புகளின் பேரணியிலும் கண்டிட முடியாத திராவிடர் கழகத்திற்கே உரித்தான நேர்த்தியான அம்சம் இது.

மகளிர் தீச்சட்டி ஏந்தி வருவார்கள். கோயில்களில் தீச்சட்டி எடுப்பதுண்டு. அதற்குக் கூறப்படும் காரணம் _ கடவுள் சக்தியாம்!

அப்படிஒருசக்தி உண்டா? உண்மையிலே இருக்-கிறதா? கடவுள் சக்தியாவது வெண்டைக்-காயாவது!

இதோ பார் கடவுள் இல்லை _ இல்லவே இல்லை என்று நாங்கள் தீச்சட்டியை ஏந்திக் காட்டுகிறோம் என்பதற்கான செயல்முறை விளக்கம்தான் கழக மகளிர் தீச்சட்டி ஏந்திவரும் நிகழ்ச்சி.

தீச்சட்டி இங்கே! மாரியாத்தாள் எங்கே? என்று பெண்கள் தீச்சட்டி ஏந்தி முழக்கமிட்டு வரும்போது, பொதுமக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் கவனிக்-கிறார்கள் _ வைத்த விழி அசையாமல் அதிர்ந்து போய் பார்க்கிறார்கள்.

பார்வையாளர்கள் பெரும்பாலும் பக்தர்கள்தானே! அவர்களின் சிந்தனையில் ஒரு பொறியைத் தட்டிக் கிளப்புவதற்கு இந்தச் செயல்முறை பெரிதும் பயன்படும் என்பதில் அய்யமில்லை.

கோயிலில் தீச்சட்டி எடுப்பதாக இருந்தாலும் சரி, பகுத்தறிவாளர்கள் தீச்சட்டி ஏந்துவதாக இருந்தாலும் சரி மண் சட்டியின் அடியில் எளிதில் வெப்பம் கடத்தாத உமி, மணல் போன்ற பொருள்களைப் போட்டுத்தான் வைப்பார்கள்.

யாரும் வெண்கலச் சட்டியில் தீ வார்த்துத் தூக்கிச் செல்ல முடியாது. தீக்குண்டம் இறங்குவதும் அப்படித்-தான்!

விறகை நெருப்பாக்கி, அதன்மீது நடந்து செல்ல முடியுமே தவிர, இரும்புத் தகட்டைச் சூடாக்கி எட்டுக்-குடி முருகனுக்கு வேல்! வேல்! என்று கூவி நடந்து செல்லவே முடியாது. இரும்புக்கும், விறகுக்கும் வெப்பம் கடத்தும் அளவில் வேறுபாடு உண்டு.

கடவுள் சக்தி என்று கூறி மக்களை நம்ப வைப்ப-தற்காக தீக்குண்டம் போன்ற பாமரத்தனமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறார்கள்.

அலகுக்குத்தி கார் இழுப்பதும் அப்படித்தான். முதுகில் இயங்கா சதையில்தான் அலகைக் குத்துவார்கள். மார்பில் குத்தி சப்பரத்தை கோயிலில் இழுப்பதுதானே?

மக்கள் மத்தியில் மண்டிக் கிடக்கும் மூடச் சகதிகளை விரட்டியடிப்பதற்காக, அதே காட்டுமிராண்டி செயல்களை பகுத்தறிவுவாதிகளும் செய்து காட்டித் திருத்தவேண்டியுள்ளதே _ என்ன செய்ய! முள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டியுள்ளது!

அதேபோல, கோயில் பூசாரி அரிவாள்மீது ஏறி நின்று தனக்குத் தனியாகக் கடவுள் சக்தி என்ற கை முளைத்-திருக்கிறது என்று காட்டிக்கொள்ள முயற்சிப்பார். பளபளக்கும் அரிவாள்மீது ஏறி நின்று அசத்துவார்!

அதே செயலை கருஞ்சட்டைத் தோழர்கள் கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று முழக்கமிட்டு கூரிய அரிவாள்மீது ஏறி நின்று காட்டி, பொதுமக்களின் மத்தியில் கொஞ்சம் சொரணையை, சிந்தனைத் தூண்டு-தலை ஏற்படுத்துவார்கள். வழக்கறிஞரான உரத்தநாடு அ. அருணகிரி, அட்டகாசமாக பளபளக்கும் அரிவாள் சுனையில் ஏறி நின்று அசத்தினார். குறிப்பாக, இளை-ஞர்கள், மாணவர்கள் மத்தியில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

அண்மையில் ஈரோடு மாவட்டம் பண்ணாரியில் மாபெரும் தீக்குண்டம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து திரா-விடர் கழகத் தோழர்கள் தீக்குண்டத்தில் இறங்கிக்-காட்டி அந்த வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திவிட்டனர்.

பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழா _ அதன் தீமிதி என்பது அந்த வட்டாரத்தில் பிரசித்தமானது. அந்த மாயையை உடைத்துக்காட்டவே அப்படி ஒரு நிகழ்ச்சியைக் கழகம் அங்கு அரங்கேற்றியது. அதன் பலன் கைமேல்! ஏராள இளைஞர்கள் இயக்கத்தை நோக்கி அந்தப் பகுதியில் வந்துகொண்டுள்ளனர்.

திராவிடர் கழகத்தின் மூட நம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரத்தில் மந்திரமா? தந்திரமா? என்ற நிகழ்ச்சி மிக முக்கியமானது.

மந்திரசக்தி என்றும், கடவுள் அருள் என்றும் கூறி சில தந்திரக் காட்சிகளைச் செய்து காட்டி, இது மந்திரத்தின் வலிமை என்று பொதுமக்களை மயக்குவார்கள்.

பாமர மக்கள் மந்திரவாதிகள் என்று சொல்லப்-பட்டவர்கள் விரிக்கும் வலையில் விழுந்து விடுவார்கள்.

புட்டபர்த்தி சாயிபாபா இந்த வகையில் பெரிய அளவு விளம்பரம் பெற்ற சாதாரண மனிதர்தான்.

புட்டபர்த்தி சாயிபாபா செய்துகாட்டும் அத்தனை மாயா ஜாலங்களையும் கழகத்தில் பயிற்சி பெற்ற இளை-ஞர்கள் சர்வ சாதாரணமாக செய்துகாட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

தொடக்கத்தில் நீடாமங்கலம் புரபசர் டாக்டர் கே.ஆர். குமார் அவர்கள்தான் கழகத்தின் முன்னோடியாவார். (80 வயதைக் கடந்த முதுபெரும் பெரியார் பெருந்-தொண்ட-ராக திருவலஞ்சுழியில் வாழ்ந்து கொண்-டுள்ளார். அவரின் இணையர் ஜெயமணிக்குமார் அவர்-களும் இந்தத் தந்திர வித்தையில் கைதேர்ந்தவராக, கழகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டும் வருகிறார்).

சென்னை மாணவர் கழக மாநாட்டில் பிற்பகல் நிகழ்ச்சியில் இந்த மந்திரமல்ல, தந்திரமே! நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. செயங்கொண்டம் கலை-வாணன் _ கரூர் நெல்சன் குழுவினர் தொழில் ரீதியாக நடத்தும் தந்திரக் கலைஞர்களுக்கு நிகராக புதிய புதிய அம்சங்களை செய்துகாட்டி வியக்கச் செய்தனர்.

கலை நிகழ்ச்சிகள்

கலை நிகழ்ச்சிகளும், கழகத்திற்கே உரிய தனி அணிகலனாகும். பாடல்களும், விளக்கங்களும் கழகப் பிரச்சாரத்தின் வெற்றிக்குப் பெரும் துணையாக இருந்து வருகின்றன.

குடந்தை என்.ஜி. ராசன் குழுவினர், இராவணன் கலா நிகழ்ச்சி, மதுரை செல்வா _ கலைத்தூதன் குழு-வினர், பொன்னம்மாள் _ சேதுராமன் கலை நிகழ்ச்சி, செருநல்லூர் வீ.கே.ராமு இசைக்குழு, உடுக்கடி அட்ட-லிங்கம், அணைக்கரை டேப் தங்கராசு, கீழ்வேளூர் வேணுகோபால் இசைக்குழு, திருத்தணி பன்னீர்செல்வம் இசைக்குழு (இவர் முறையாக அரசு இசைக்கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றவர்) என்று கழகத்தின் வரலாற்றில் முத்திரை பொறித்த கலைக்குழுக்கள் தந்தை பெரியார் கொள்கைப் பயணத்தில் தங்கள் பங்களிப்பை வெகுவாகவே அளித்து வந்திருக்கின்றன.

வெறும் பாடகர்களாக மட்டும் இல்லாமல் கழகம் நடத்திய போராட்டங்களிலும் பங்கேற்று சிறைக்-கோட்டம் சென்றவர்களாகவும் அவர்கள் இருந்து வந்துள்ளனர் என்பது மேலும் பெருமைக்குரியதாகும்.

திராவிடர் கழகப் பொதுக்கூட்டங்கள் என்றால், தொடக்கத்தில் கழகத் தோழர்கள் கொள்கை முழக்கப் பாடல்களை உரத்த குரலில் பாடுவது வழக்கமாகும்.

இப்பொழுதுகூட இயக்கப் பிரச்சாரகர்களில் தோழர்கள் இராம. அன்பழகன், திருவாரூர் சு. சிங்காரவேலு, புவனகிரி யாழ் திலீபன் போன்றவர்கள் சிறந்த பாடகர்களாகவும் இருப்பதால், இவர்களின் சொற்பொழிவுகளில் இடை இடையே இசைப் பாடல்களும் இடம் பெறுவதால் பொதுமக்கள் மத்தி-யிலே ஓர் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.

நடந்து முடிந்த மாணவர் கழக மாநில மாநாட்டில் ஒரு நிகழ்ச்சிக்கும், இன்னொரு நிகழ்ச்சிக்கும் இடையே கொள்கைப் பாடல்கள் பாடப்பட்டன. ருசிய நாட்டில் இருக்கும் இந்த முறை கழக மாநாட்டில் பின்பற்றப்பட்டது _ பார்வையாளர்களை இந்த முறை வெகுவாகவும் கவர்ந்தது.

வீதி நாடகம்

திராவிடர் கழகப் பிரச்சாரத்தில் வீதி நாடகம் என்பது இப்பொழுது பொதுவாக பொதுமக்கள் மத்தியிலே பெரிதாகப் பேசப்படும் ஒன்றாகும்.

இடதுசாரிகள் கைகளில் இருந்த இந்தக் கலை இப்பொழுது திராவிடர் கழகத்தின் சார்பில் அடுத்தகட்ட பரிணாமமாக _ புதுமைகளின் சேர்க்கை-களோடு, நவீன யுக்திகளோடு மிகுந்த வரவேற்போடு வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

தெற்கு நத்தம் சித்தார்த்தன், பெரியார்நேசன் குழு-வினர் கழகப் பிரச்சாரத் திசையில் வீதி நாடகங்கள் மூலம் புதிய பொலிவுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

சென்னை தாணா தெருவில் நடைபெற்ற திறந்தவெளி மாநாட்டில் (16.4.2010) கழகத்தின் வீதி நாடகங்கள் பொதுமக்களைப் பெரிதும் கவர்ந்தன.

சென்னை மாநகரத் தந்தை வணக்கத்திற்குரிய மேயர் ம. சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் வீதி நாடகத்தை வெகுவாக ரசித்தனர், பாராட்டினர். தொடக்கத்திலேயே வராமல் போய்விட்டேனே என்று தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் எழுச்சித் தமிழர் திருமாவளவன்.

ஆரியர் வருகை, பார்ப்பனர்கள் சூழ்ச்சியும், மன்னர்கள் வீழ்ச்சியும், பாவ மன்னிப்பு, கிரிக்கெட் பைத்தியம், கதவைத் திற....... என்று ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து ஆடு, மாடுகளை ஓட்டி வந்து திராவிடர்களிடையே இல்லாத ஜாதியையும் வழிபாட்டு முறைகளையும், மூட நம்பிக்கைகளையும் புகுத்தியது முதல்_ காவி வேட்டிக் காமலோலன் நித்தியானந்தா பித்தலாட்டம்வரை தோலுரித்து சாறு பிழிந்து தூக்கி எறிந்துவிட்டனர்.

கதவைத் திற காற்றுவரும் என்று சொல்லுவதற்கு சாமியார்கள் தேவையா?

சுயமரியாதைக் கதவைத் திற _

பகுத்தறிவுக் காற்றுவரும் _

சுரணை வரும்

தன்மானம் வரும்

என்று கூறி முடித்த பாங்கு பலே பலே என்று பாராட்டத்தக்கதாக அமைந்திருந்தன.

பல்சுவை பாப்பாநாடு பாஸ்கர்

ஆயிரக்கணக்கில் கூடியிருந்த பார்வையாளர்களை தன் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்ட ஒருவர் உண்டென்றால், அவர்தான் பாப்பாநாடு பாஸ்கர்.

பல்சுவை மன்னன் என்று பட்டம் கொடுத்துவிடலாம். பாடலும், பல குரல் பேச்சும், விகடமும் மக்களை விழுந்து விழுந்து சிரிக்க மட்டுமல்ல, சிந்திக்கவும் வைத்தது.

பார்ப்பான் ஏன் தவில் அடிப்பதில்லை? பார்ப்பான் ஏன் நாதசுர இசை பக்கம் தலைகாட்டுவதில்லை? என்ப-தற்கு அறிவுப்பூர்வமான விளக்கங்களை அவர் தந்த-போது, ஆமாம், நீங்கள் சொல்லுவது உண்மைதான் என்று எல்லோரது தலைகளும் அசைந்தன.

தவில் வாசிப்பு, நாதசுரம் வாசிப்பு என்பது சாதாரணமல்ல, கடினமானது. அதிக உழைப்பை உள்வாங்கும் தன்மையது. உந்திக் கமலத்திலிருந்து ஊற்றெடுக்கவல்லது அல்லவா நாதசுரம். அதேநேரத்தில், பிடிலும், மிருதங்கமும், கஞ்சிராவும், மோர்சிங்கும் பார்ப்பனர் கைகளுக்குப் போனதன் காரணம் அந்த அளவுக்குக் கடும் உழைப்புக்கும், களைப்படைவதற்கும் தேவையற்றவை என்பதுதான்.

இவற்றை பாஸ்கர் வார்த்தைகளால் மட்டும் சொல்லவில்லை. பல குரலில் அவர் இசைத்துக் காட்டியது அடேயப்பா, பிரமாதம்! பிரமாதம்!!

ஒரு நாள் மாநாட்டில் இத்தனை அம்சங்களா? புதுமைகளா? வெற்றிகளா?

திராவிடர் கழகத்தால் மட்டுமே சாதிக்கப்படக் கூடியவை இவை. காரணம், முற்றிலும் கொள்கைவயப்பட்ட இயக்கம் இது! _ அதன் கொள்கை தோற்கப்பட முடியாதது _ தவிர்க்கப்பட முடியாதது! மூச்சுக் காற்று வேண்டாம் என்று சொல்கிற முற்றும் துறந்த முனிவர்கள் உண்டா?

கழகத்தின் கொள்கைகளைக் கடைப்பிடிக்க முடியவில்லையே என்று ஏங்குகிற மக்கள் உண்டு; அதேநேரத்தில் இந்தக் கொள்கை கூடாது, தேவையற்றது என்று சொன்ன காலம் மலையேறிவிட்டது. இது காலத்தின் கட்டாயம்!

- மின்சாரம் -

[ விடுதலை நாளிதழ் 19.04.2010 ]

No comments:

Post a Comment