கேட்டவை கிடைக்குமிடம்:

Monday, April 26, 2010

திராவிடர் மாணவர் எழுச்சி மாநில மாநாட்டுச் சிந்தனை! (2)

தோல்வி அடைய இடமில்லாத ஓர் அமைப்பு

திராவிடர் கழகம் மாநில மாநாட்டில் படத் திறப்பு-கள் என்ற ஓர் அம்சம் இடம்பெறும். சென்னை-யில் மாணவர் கழக மாநாடு ஒரே ஒரு நாள் என்பதால், பொதுவாக தொண்டர்கள் முதல் தலைவர்கள் ஈறாக அனைவரையும் உள்ளடக்கும் வகையில் சுயமரியாதைச் சுடரொளிகள் படத்திறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்குமுன்பும்கூட இவ்வாறு நடத்தப்பட்டதுண்டு.

திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் மானமிகு கோ. சாமிதுரை அவர்கள் அப்படத்தினைத் திறந்து வைத்து சுருக்கமாக உரையாற்றினார்.

உள்ளங்கை அளவுள்ள ஒரு காகிதத்தில் இந்திய அரசமைப்புச் சட்டம் _ ஜாதியைப் பாதுகாக்கும் 25, 26 பிரிவு என்று குறிப்பிட்டு அதனை எரிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் அறிவித்தார். பத்தாயிரக்கணக்கான கழகத் தொண்டர்கள் குடும்பம் குடும்பமாக ஈடுபட்டதுண்டு. நிறை மாதக் கர்ப்பிணிப் பெண்கள்கூட சிறை சென்றனர்.

சிறையில் பிறந்த குழந்தைக்குச் சிறைப் பறவை என்று கூடப் பெயர் சூட்டினார்கள். அந்தத் தன்னல-மற்ற கறுப்பு மெழுகுவத்திகளுக்கு வீர வணக்கம் செலுத்-தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.

சட்டத்தை எரித்தால் மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை என்ற இந்தப் போராட்டத்துக்காகவே புதிய சட்டம் அவசர அவசரமாக இயற்றப்பட்டது. (Prevention of Insult to National Honour Act - 1957).

அதைப்பற்றிக் கொஞ்சம்கூட கவலையின்றி பத்தாயிரம் பேர் எரித்தனர் என்றால், இதற்கு இணை-யான போராட்டமோ, இந்தக் கருஞ்சட்டைத் தோழர்-களுக்கு நிகரான தொண்டர்களோ எங்கே காண முடியும்?

கழகப் பொருளாளர் அந்த உணர்வை வெளிப்-படுத்தினார். மாலையில் சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற திறந்தவெளி மாநாட்டுக்கு சுயமரியாதைச் சுடரொளியாகிவிட்ட வில்லிவாக்கம் அ. குணசீலன் அவர்களின் பெயர் சூட்டப்பட்டது.

சின்னஞ்சிறு வயதிலேயே இயக்கத்தால் ஈர்க்-கப்பட்டு, 70 ஆண்டுகாலம் முரட்டுக் கருஞ்சட்டை வீரராக வாழ்ந்து காட்டிய சீலர் அவர்.

திராவிடர் கழகத் தோழர்கள் நாட்டின் விஞ்ஞானிகள். அவர்களை இழப்பது ஒரு விஞ்ஞானியை இழப்பதற்கு இணையானது. அவர்கள் நீண்ட காலம் வாழ வேண்டியவர்கள். 95 ஆண்டுகாலம் வாழ்ந்து காட்டியதன் மூலமாகக்கூட பகுத்தறிவுக் கொள்கைக்கு ஒரு புது முறுக்கை _ கம்-பீரத்தை ஏற்படுத்திய தலைவர் தந்தை பெரியார்; அவர்களின் சீடர்களும் நீண்ட நாள் வாழவேண்-டியவர்கள்.

நற்சிந்தனை, நன்னடத்தை, காலமுறையான பணிகள், எளிய உணவு முறை, பொதுத்தொண்டின்மூலம் பெறும் மன நிறைவு இவை கைகோத்தால் எந்த மனிதனும் சுலபமாக மரணப் படுக்கையில் வீழவேண்டிய அவசியம் இல்லையே!

இந்தியாவில் ஆண்கள் சராசரியாக 63.9; பெண்கள் சராசரியாக 66.9 ஆண்டுகள் வாழ்கிறார்கள்.

இந்த சராசரியைவிட பகுத்தறிவாளர்கள், கருஞ்-சட்டைத் தோழர்கள் அதிக காலம் வாழ்ந்து காட்டுவது-கூட கொள்கை வெற்றிக்கான ஒரு பிரகடனம்தான்.

நூறு வயதைக் கடந்த என்.வி.ஆர். (சிதம்பரம்) 97 வயதில் நடைபோடும் பட்டுக்கோட்டை என். இராமா-மிர்தம், 95 அய் தொடும் திருவாரூர் எஸ்.எஸ். மணியம், 90 அய்க் கடந்த வடகரை முனுசாமி, 86 இல் வீறுநடை-போடும் கழகத்தின் செயலவைத் தலைவர் ராசகிரி கோ. தங்கராசு, 87 இல் கால் பதிக்கும் பெரியார் பெருந்-தொண்டர்கள் பொத்தனூர் க. சண்முகம் (தலைவர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்), வேல். சோமசுந்தரம், 84 இல் மிதக்கும் செய்யாறு பா. அருணா-சலம், 97 காணும் நெடுவாக்கோட்டை வை. குப்புசாமி, 86 வயதில் பயணிக்கும் சிவகங்கை இராமலக்குமி சண்முகநாதன், 87 வயதில் பெரியார் பெருந்தொண்டர் ஆலந்தூர் இராமச்சந்திரன் என்று (எடுத்துக்-காட்டுக்-காகவே இவை) ஒரு நீண்ட பட்டியலே உண்டு.

திராவிடர் மாணவர் கழக மாநாடு _ ஆயிரக்-கணக்கில் மாணவர்கள் திரண்டனர் என்றால், அவர்கள் இந்த மூத்த பெரியார் பெருந்தொண்டர்கள் என்னும் வேர்களுக்கான விழுதுகள் ஆயிற்றே! அவர்கள்தம் ஆயுளின் இரகசியத்தை தெரிந்துகொள்ளவேண்டும்தான்.

ஒரு உற்சாக பின்னலில் வருவது, கொள்கைக்காக உயிரையே விடுவேன் என்று கர்ச்சிப்பது, கொஞ்சம் விளம்பரம் பெற்றால் கோளாறாகச் சிந்திப்பது _ அடுத்து நமக்கு எந்த இடம் என்று கனவு காண்பது, மற்றவர்-களைவிட தான் ஒரு தீவிரவாதி என்று காட்டிக் கொள்வதற்காகக் குறுக்குச்சால் ஓட்டுவது, குழு சேர்ப்பது, ஸ்தாபன ரீதியாகப் பணியாற்றும் கட்டுப்பாட்டைக் குலைப்பது என்கிற எந்தக் கிருமியும் அண்ட முடியாத பெரு நெருப்புக் கோளமாக நிறைவுணர்வுடன், பெருங்குணத்துடன் காட்சியளிக்கும் இத்தகையோர் நமது வணக்கத்துக்கும், வழிகாட்டுதலுக்கும் உரியவர்கள் அல்லவா!

திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் விடுதலை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தபடி (18.4.2010) பதவி, பவுசுகள் இங்கு இல்லை என்றாலும், இலட்சிய வெறி _ நெறி ஒன்றை நாடித்தானே இந்த இயக்கத்தின் இளைஞர்கள்முதல் முதியோர்வரை செழுங்கிளையாகக் காட்சியளிக்கின்றனர்.

பெரியார் கொள்கை என்பது ஒரு வாழ்க்கை நெறி-முறை (கி கீணீஹ் ஷீயீ லிவீயீமீ) தனி வாழ்விலும், பொது வாழ்-விலும் வெற்றி பெறுவதற்கான சகல கூறுகளும் இதில் அடங்கியிருக்கின்றன.

இதுபற்றி அருப்புக்கோட்டை உரையில் (1.12.1946) தந்தை பெரியார் குறிப்பிடுகிறார்:

கழக வெற்றியின் இரகசியம் என்ன? திராவிடர் கழகம் இந்த நாட்டு திராவிட மக்கள் (சென்னை மாகாண) நலனுக்கும், மேம்பாட்டுக்கும் உழைக்கும் ஸ்தாபனமாகும். திராவிட மக்கள் இந்த ஸ்தாப னத்தை தங்கள் நலனுக்காக ஏற்பட்ட ஸ்தாபனம் என்பதை ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளா விட்டாலும் சரி, திராவிட மக்களுக்கு உழைக்கும் பொறுப்பை மேலே போட்டுக் கொண்டு தான் கருதிய துறையில் அது தொண்டாற்றி வருகிறது. எல்லோ ருடைய ஒத்துழைப்பும், ஆதரவும் சரிவர இல்லா விட்டாலும், அது தான் எடுத்துக்கொண்ட முயற்சியில் வெற்றி பெற்றுக்கொண்டுதான் வருகிறது. காரணம் என்னவென்றால், அதன் கொள்கையும், திட்டமும் தவற முடியாததும், எதிர்க்க யாராலும் முடியாததும் ஆகும்.

உத்தியோகம், பதவி, தனிப்பட்டவர்கள் நலம் என்பதான கொள்கையும், திட்டமும் வெற்றிபெற வேண்டுமானால், கோஷ்டிக் கூட்டுப் பொறுப்பு, தந்திரம், பித்தலாட்டம் முதலியவை தேவை. திராவிடர் கழகம் தனிப்பட்டவர் நலனுக்கு இடமே இல்லாத திட்டமுடையதாகும். உத்தியோகம், பதவி எண்ணமோ உதிக்கச் செய்ய இடமில்லாத கொள்கை உடையதாகும். ஆதலால், அது தோல்வி அடைய இடமில்லாததாக இருக்கிறது (தந்தை பெரியாரின் அருப்புக்கோட்டை உரை, 1.12.1946) என்று இன்றைக்கு 64 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் கூறியுள்ளார்.

வெற்றியின் இரகசியம்பற்றிக் கூறிய அந்தப் பகுத்தறிவுப் பகலவன் கழகத்தின் பலம்பற்றியும், தெளிவுபடுத்தியுள்ளார்.

நாம் எதிர்பார்த்த இலட்சியத்தில் எதிலும் தோற்றுவிடவும் இல்லை, பெரிதும் வெற்றி பெற்றுக்கொண்டு மற்றவர்களும் ஏற்கும்படிதான் வளர்த்து வருகின்றோம்.

இந்த நிலை, பெருமை மாறாமல் இருக்க வேண்டும். இப்படியே இருந்துவரும் நிலையிலேயே நான் சாகவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

நமது தோழர்களும், நாணயமாகவும், கட்டுப்பாடாகவுமே இருக்கின்றார்கள்.

நமது கொள்கையில் ஓட்டை விழுந்தால்கூட பரவாயில்லை. ஆனால், நாணயத்தில், ஒழுக் கத்தில் தவறு இருக்கக்கூடாது. அதுதான் ஒரு கழகத்துக்கு முக்கியமான பலம்.

பணம், காசைப்பற்றி அதிகம் சொல்லவேண் டியது இல்லை. நான் கழகத்துக்கு வரும்போது கழகத்தில் பணம் இல்லை. சொந்தக் காசுதான் செலவு செய்தேன் (மன்னார்குடியில் தந்தை பெரியார் உரை, விடுதலை, 11.10.1964).

எண்ணிக்கை பலத்தைவிட, எண்ண பலமும், அதனைச் செய்து முடிக்க எந்த விலையும் கொடுக்கத் தயாரான தொண்டர் பலமும் உள்ளவரை இந்த இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் வீழ்த்த முடியாது.

வாழையடி வாழையாக வரும் திருக்கூட்டத்தினை கடந்த வெள்ளியன்று தலைநகரம் சந்தித்தது.



-
மின்சாரம் -

No comments:

Post a Comment