காமினி அரங்கத்தில் நடை-பெற்றது. தெலுங்கு மொழியில் யர்லகட்ட லட்சுமி பிரசாத் என்ப-வருக்கு விருது அளிக்கப்பட்டது.
திரவுபதி என்னும் தெலுங்கு நூலை எழுதியதற்காக அந்த விருது வழங்கப்பட்டது.
அந்த நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களைச் சேர்ந்த பத்து பேர்கள் திடீரென்று மேடைக்கு ஓடிச் சென்று, விருது பெற்ற-வருக்கு எதிராகக் குரல் எழுப்பி, அவர் கையில் இருந்த விழா மலரையும் பறித்து வீசி எறிந்தனர். எதிர்பாரா விதமாக நடைபெற்ற இந்த அநாகரிக அவலத்தைக் கண்டு பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இவ்வளவுக்கும் விருது பெற்-றவர் சாதாரணமானவர் அல்லர். ஆந்திர மாநில இந்தி அகாடமி-யின் தலைவர், ஆந்திரப் பல்-கலைக் கழகம் விசாகப்பட்டினத்-தில் இந்தித் துறையின் தலைவ-ராகவும் இருந்தவர். மகாபார-தத்தை அடிப்படையாகக் கொண்டு திரவுபதைபற்றி எழுதிய அவரின் நூலுக்குத்தான் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
திரவுபதையை இழிவுபடுத்தி அந்த நூலில் எழுதப்பட்டதாகக் குற்றச்சாற்று.
அறிவுத்துறை வேலை செய்-திருந்தால் அந்த நூலுக்கு மறுப்பு எழுதி இருந்தாலும் கண்ணியம் கடுகு அளவுக்கும் அவர்களிடம் இருந்திருந்தால் வேறு வகைகளில் எதிர்ப்பைக் காட்டியிருக்கலாம்.
இரண்டும் இல்லாதவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்பதால் அவர்களுக்கே .உரித்தான தனித்-தன்மையான காலாடித்தனத்தில் இறங்கி இருக்கின்றனர்.
இந்தத் தகவலை விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு நேரில் சென்ற தோழர் அருள்பேரொளி (சென்னை -_ வேளச்சேரி) என்பவர் நமக்குத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இந்து மதத்தின் இதி-காசங்கள் என்று கூறப்படும் இராமாயணம் மகாபாரதம் மற்றும் கீதையை அக்குவேர் ஆணி வேராக அலசி எடுத்து வந்திருக்-கிறோம் _ வருகிறோம் _ அவற்றை பல நேரங்-களில் எரியூட்டவும் செய்திருக்கிறோம்.
இராவண லீலாவே நடத்தி இராமன், சீதை, இலட்சுமணன் உருவங்களை பல லட்சம் மக்கள் முன் எரித்தும் காட்டியுள்-ளோம்! ஆனால் வேறு மாநிலத்தில் வேறு வகை-யாக நடக்கிறது என்றால் அதன் காரணம் என்ன?
அங்கு ஒரு பெரியார் இல்லை; அங்கு ஒரு மணியம்மையார் இல்லை; அங்கு ஒரு வீரமணி இல்லை; அங்கு ஒரு திராவிடர் கழகம் இல்லை; அங்கு கருஞ்சட்டைத் தொண்-டர்கள் இல்லை என்றுதான் பொருள்.
யார் இந்த திரவுபதி?
5 கணவன்கள் போதாது என்று கருதி ஆறா-வது ஆசாமியாகிய கர்ணன் மீதும் காமம் கொண்டவள் தானே? இல்லை என்று மறுக்க முடியுமா? அதற்கு அந்தத் திரவுபதி கூறும் காரணம் என்னவாம்?தருமன் -_ சதா வேதாந்தம் படிப்-பவன்; பீமன் -_ உடல் பெரியவன், குண்டன், சதா சாப்பிட்டுக் கொண்டே இருப்பவன்; அர்ச்சுனன் _ ஏகப்பட்ட மனைவி-களுக்குச் சொந்தக்காரன், ஆற்று மணலை எண்ணினாலும் அர்ச்-சுனன் மனை-வியை எண்ண முடியாதாம்! நான்-காவது கண-வனான நகுலனும், 5ஆவது கணவ-னான சகாதேவனும் எனது பிள்-ளைகள் போன்றவர்கள். அதனால்-தான் கர்ணன் மீது காமம் கொண்-டதாக ஒருத்தி சொல்கிறாள் என்றால், அந்தப் பெண்ணின் யோக்கியதையை தெரிந்து கொள்ள வேண்டாமா?
அய்ந்து பேருக்கும் தேவி அழியாத பத்தினி என்று இந்துமதம் இத்தகைய பெண்ணைப் போற்று-கிறது; கடவுளாகத் தொழுகிறது என்றால் இந்த மதத்தின் யோக்-கியதை எத்தகையது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாமே!
இந்து மதத்தில் அழியாத பத்தினியாக ஒருத்தி இருக்கவேண்டு-மானால் ஒரே நேரத்தில் பல கணவன்மார்கள் இருக்க வேண்டும் என்று தானே பொருள்? உண்மையைச் சொன்னால் உடல் எரிவானேன்? அறிவார்ந்த ஓர் அவையின் மேடையில் ஏறிக் காலித்தனத்தில் இறங்குவானேன்?
மகாபாரதத்தில் விபச்சாரத்தில் பிறக்காத ஒரே ஒரு ஆள் உண்டா? பந்தயம் கட்டிக் கேட்கிறேன் என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் கேட்டாரே, எந்த பாரதப் பிரசங்கி இதுவரை பதில் சொல்லி-யிருக்கிறார்? மகாபாரதத்தின் யோக்கியதைக்கு வேறு எங்கும் தேடிப் போக வேண்-டாம்.
தொலைக்காட்சியில் மகாபாரதம் ஒளிபரப்பப்பட்டபோது நேயர் ஒருவர் இந்து ஏட்டில் (18.12.1988) எழுதிய கடிதம் ஒன்று போதுமே! கடிதம் எழுதியவர் சென்னையைச் சேர்ந்த டி.ஆர். சுந்தரம். கடிதம் இதோ: தர்மபுத்திரா (யுத்திஸ்த்ரா), வாயுபுத்ரா (பீமா) ஆசியோடு குந்திக்கு, தருமர் ஆகியோர் பிறக்கிறார்கள். தொலைக்காட்சியில் வாயுவைக் காட்டும்போது, உடனே குழந்தைகள். அந்த பிறப்புபற்றி சில கேள்விகளைக் கேட்கத் துவங்கி விடுகிறார்கள். பெற்றோர்களால் அந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. அது தெய்வீக சம்பந்தப்பட்டது; எனவே அதுபற்றி எல்லாம் குழந்தைகள் கேள்வி கேட்கக் கூடாது என்றுதான் பெற்றோர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்போது மேலும் தொடர்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன. பாண்டவர்களும், கவுரவர்களும் சூதாடுவது, பாண்டவர்கள் தோற்பது, மனைவியை வைத்தே சூதாடுவது, திரவுபதையைத் துகில் உரிவது ஆகிய காட்சிகள் எல்லாம் வர இருக்கின்றன. இவைகளை குழந்தைகளை வைத்துக் கொண்டு எப்படிப் பார்க்க முடியும்?
நாம் நமது குழந்தைகளிடம் திரவுபதி 5 ஆன்மிக சக்திகளின் சின்னம்; எனவே 5 பேரை மணந்து கொண்டார் என்று கூறினால், அவர்கள் திருப்தி அடைந்து விடுவார்களா? அல்லது கட்டிய மனைவியை, மற்றவன் துகில் உரிவதைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் புருஷலட்சணம் என்று அவர்களிடம் கூற முடியுமா? நமது காலத்தைவிட இக்காலக் குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். 3000, 5000 ஆண்டு-களுக்குமுன் நடந்ததை இப்போது அவர்களிடம் விவரித்து, குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது. எல்லாவற்றுக்கும் தெய்வீக முத்திரையைக் குத்தி, நாம் குழந்தைகளிடம் வியாக்யானம் செய்து கொண்டிருக்க முடியாது.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகாபாரதத் தொடர் வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கக் கூடியதாகும். எனவே நள்ளிரவு சினிமாக்களை ஒளி-பரப்பும் நேரத்தில், இதை ஒளிபரப்புவது நல்லது _ இவ்வாறு அந்த வாசகர் தமது கடிதத்தில் எழுதியிருக்கிறார்.
இந்த யோக்கியதையில் உள்ளது-தான் மகாபாரதம். இதைச் சொன்னால் மானம் போகிறதாம்! அப்படியென்றால் இவர்களின் மான உணர்வின் யோக்-கியதைதான் என்ன?
மின்சாரம்
2 comments:
இந்து மதம் திரௌபதையைக் கடவுளாகக் காட்டியதில்லை. இந்து மதம் என்றால் என்னவென்பதைப் பெரியாரும் முற்றுமுழுதாக அறியவில்லை. RSS இனரும் அறியவில்லை
இதுதான் உண்மை.
கடவுள் என்பதே உனக்குள் இருக்கும் சக்தியை அடைதல் என்றுதான் சமயம் கூறுகிறது.
சில இடைச்செருகல்களை எல்லாம் வைத்து இந்துமதம்தொடர்பாகக் குழப்பிக்கொள்ளாதீர்கள்
Post a Comment